/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
காலவரையற்ற வேலை நிறுத்தம் நிலஅளவை பணிகள் பாதிப்பு
/
காலவரையற்ற வேலை நிறுத்தம் நிலஅளவை பணிகள் பாதிப்பு
காலவரையற்ற வேலை நிறுத்தம் நிலஅளவை பணிகள் பாதிப்பு
காலவரையற்ற வேலை நிறுத்தம் நிலஅளவை பணிகள் பாதிப்பு
ADDED : நவ 20, 2025 09:30 AM

மதுரை: 'அனைத்து வருவாய்த்துறை ஆவணங்களும் இணைய வழியாக்கப்பட்டதால், உட்பிரிவு பட்டா மாறுதல் பணியில் கைப்பிரதி தயார் செய்வதை தவிர்க்க உத்தரவிட வேண்டும்' என்பது உட்பட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நிலஅளவை அலுவலர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் 10 தாலுகாக்கள், கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றிய நுாற்றுக்கணக்கான சர்வேயர்கள் பணியில் ஈடுபடாததால் நிலஅளவை பணிகள் பாதித்தன. பணியை புறக்கணித்த அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர். மாவட்ட தலைவர் ராஜ்குமார் தலைமை வகித்தார். துணைத் தலைவர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் முத்துமுனியாண்டி, மாவட்ட செயலாளர் ரகுபதி விளக்கி பேசினர்.
அவர்கள் கூறுகையில், ''தரம் இறக்கப்பட்ட அளவர் பணியிடங்களை மீண்டும் பெற்றுத் தரவேண்டும். இணைய வழியில் மட்டுமே பதிவேற்றம் செய்வதை உறுதி செய்ய வேண்டும். லைசென்ஸ் சர்வேமுறை, வெளிமுகமை புலஉதவியாளர் பணிகளை ரத்து செய்து காலமுறை ஊதியத்தில் பணியமர்த்த வேண்டும். வழக்குகளை அதிகம் சந்திக்கும் அளவர்களுக்கு நிர்வாக பயிற்சி நீதிமன்ற பயிற்சி வழங்க வேண்டும்'' என வலியுறுத்தினர்.
அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் நீதிராஜா, மாவட்ட நிர்வாகிகள் தமிழ், சந்திரபோஸ், பரமசிவம், சிவகுரும்பன், வருவாய்த்துறை மாவட்ட செயலாளர் முகைதீன் அப்துல்காதர் உட்பட பலர் பேசினர். பொருளாளர் மணிகண்டன் நன்றி கூறினார்.

