/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை தமுக்கத்தில் ஏப்.27 வரை தொழில் வர்த்தக பொருட்காட்சி
/
மதுரை தமுக்கத்தில் ஏப்.27 வரை தொழில் வர்த்தக பொருட்காட்சி
மதுரை தமுக்கத்தில் ஏப்.27 வரை தொழில் வர்த்தக பொருட்காட்சி
மதுரை தமுக்கத்தில் ஏப்.27 வரை தொழில் வர்த்தக பொருட்காட்சி
ADDED : ஏப் 24, 2025 05:57 AM

மதுரை: தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் சார்பில் மதுரை தமுக்கத்தில் தொழில் வர்த்தக பொருட்காட்சி நேற்று துவங்கியது.
துணைமேயர் நாகராஜன் துவக்கி வைத்தார். மாநகராட்சி வடக்கு மண்டலத்தலைவர் சரவண புவனேஸ்வரி, துணை கமிஷனர் ஜெயினுஸ் ஆபுதீன், உதவி கமிஷனர் கோபு உடனிருந்தனர். சங்கத்தலைவர்  ஜெகதீசன், செயலாளர் ஸ்ரீதர், பொருட்காட்சி தலைவர்  வரதராஜன் ஏற்பாடுகளை செய்தனர். துணைத் தலைவர்கள் ரமேஷ், தனுஷ்கோடி, இணைச் செயலாளர் கணேசன், முன்னாள் தலைவர் நீதிமோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழகம், பிற மாநிலங்களின் உற்பத்தியாளர்கள், வணிக நிறுவனங்கள், சுய உதவிக் குழுக்களின் உணவுப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், பர்னிச்சர்கள், சுடிதார், சேலை, குழந்தைகளுக்கான ஆடைகள், விதவிதமான உணவுகள் உட்பட 200க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் பொருட்காட்சியில் இடம்பெற்றுள்ளன.  உணவுகளை சுவைக்க தனி அரங்கு,  சிறுவர்களுக்கான விளையாட்டு  அரங்குகள், 'ஏசி' பஸ்சில் 12 டி விளையாட்டுகள் இடம்பெற்றுள்ளன.
ஏப்.27 வரை தினமும் காலை 11:00 மணி முதல் இரவு 9:00 வரை  பொருட்காட்சி நடைபெறுகிறது.  அனுமதி இலவசம். பார்வையாளர்களுக்கான அனுமதி சீட்டு எண் அடிப்படையில் தினமும் குலுக்கல் முறையில் மதியம் ஒரு மணி, மதியம் 3:00, மாலை 5:00, இரவு 7:00, 9:00 மணிக்கு பரிசு வழங்கப்படுகிறது. நிறைவுநாளில் மெகா பம்பர் பரிசாக மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டி, எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள், டபுள் டோர் பிரிட்ஜ் வழங்கப்படும்.

