ADDED : ஜூலை 17, 2025 12:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை செந்தமிழ்க் கல்லுாரியில், சங்கச் செயலாளர் மாரியப்ப முரளி தலைமையில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி நடந்தது.
முதல்வர் (பொ) சாந்திதேவி முன்னிலை வகித்தார். தமிழ் துறைத் தலைவர் பூங்கோதை வரவேற்றார்.
அருப்புக்கோட்டை அரசுக் கல்லுாரி பேராசிரியர் ராஜமோகன், சமூகத்திற்கு மாணவர்கள் செய்ய வேண்டிய சேவைகள் குறித்தும், வெற்றி இலக்கை அடைய அவர்களுடைய குறிக்கோளும் சிந்தனையும் ஒருமுகத் தன்மை கொண்டதாக இருப்பது குறித்தும் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
துணை முதல்வர் சுப்புலட்சுமி, ஆங்கிலத் துறை இணைப் பேராசிரியர் வேணுகா பேசினர். பேராசிரியர் செல்வத்தரசி நன்றி கூறினார். நிகழ்ச்சியை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் நேருஜி, கோகிலா, அதிவீரபாண்டியன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.