/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கல்லுாரிகளுக்கு இடையிலான ஆராய்ச்சிப் போட்டிகள்
/
கல்லுாரிகளுக்கு இடையிலான ஆராய்ச்சிப் போட்டிகள்
ADDED : பிப் 06, 2025 05:54 AM
மதுரை; மதுரை பாத்திமா கல்லுாரியில் ஆராய்ச்சி மேம்பாட்டுத் துறை சார்பில் 'இந்தியாவின் பாரம்பரிய கலை வடிவங்களின் மறுமலர்ச்சி, பாதுகாப்பு' என்ற தலைப்பில் கல்லுாரிகளுக்கு இடையிலான ஆராய்ச்சிப் போட்டி நடந்தது.
முதல்வர் செலின் சஹாய மேரி தலைமை வகித்தார். ஆராய்ச்சி டீன் கலா வரவேற்றார். 2024ல் ஆராய்ச்சி பிரிவில் அதிக புத்தகம் வெளியிட்ட பேராசிரியர்கள் சுகன்யா, கலா, பூர்ணிமா ஆகியோர் முறையே முதல் மூன்று பரிசாக ரூ. 5 ஆயிரம், ரூ. 3500, ரூ. 2 ஆயிரம் வென்றனர்.
போட்டியின் இறுதிச்சுற்றில் பாத்திமா கல்லுாரி பிரிவில் 5 குழுவும், மற்ற கல்லுாரிகள் பிரிவில் 5 குழுவும் பங்கேற்றன. பேராசிரியர்கள் கிறிஸ்டோபர் ரமேஷ், ஜெயச்சந்திரா, ஷீலா நடுவர்களாக பங்கேற்றனர். நாட்டுப்புறக் கலைகள், மதுபானி கலை, வார்லி ஓவியங்கள், நெசவுக் கலை, கால்நடைகளுக்கான பழங்கால மருத்துவம், மண்ணிலும் களிமண்ணிலும் உள்ள பாரம்பரிய கலை, வளரி ஆயுதக் கலைஉள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் மாணவர்கள் தங்கள் ஆராய்ச்சி குறிப்புகளை விளக்கினர்.
பாத்திமா கல்லுாரி பிரிவில் பாத்திமா நஸ்ரின், குகஸ்ரீ, ஷாஹின் பேகம் முதல் பரிசு, லாவன்யா, சிவரஞ்சனா, தியானா சல்ஹா 2ம் பரிசு, நாகலட்சுமி, தனலட்சுமி, சுரேகா 3ம் பரிசு வென்றனர். மற்ற கல்லுாரிகள் பிரிவில் லேடி டோக் கல்லுாரி எஸ்தர், ஹரிணிஸ்ரீ முதல் பரிசு, அனுஷா பாக்கியம், சுருதி, கார்த்திகா 2ம் பரிசு, விவேகானந்தா கல்லுாரி ஜீவித், ஜெயபிரகாஷ் 3ம் பரிசு வென்றனர்.
செயலாளர் இக்னேஷியஸ் மேரி வென்றவர்களுக்கு பரிசு வழங்கினார். ஆராய்ச்சி டீன் சியாமளா நன்றி கூறினார்.