/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மீனாட்சிபட்டியில் பன்னாட்டு பயிலரங்கு
/
மீனாட்சிபட்டியில் பன்னாட்டு பயிலரங்கு
ADDED : அக் 29, 2025 07:26 AM
மதுரை: மதுரை காமராஜ் பல்கலை தமிழியல்துறை, இலங்கை பேராதனை பல்கலை, மதுரை ஸ்ரீசனீஸ்வரா அறக்கட்டளை, திருமாஞ்சோலை பதிப்பகம் சார்பில் 'பன்முக நோக்கில் தமிழ்ப் பண்பாடும் கலைகளும்' என்ற தலைப்பில் அயலக மாணவர், ஆசிரியர்கள், கலைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிலரங்கு மீனாட்சிபட்டியில் நடந்தது.
துறைத் தலைவரும், தமிழ் பண்பாட்டு மரபுச் செல்வங்கள் நடுவத்தின் இயக்குநருமான சத்தியமூர்த்தி வரவேற்றார். காமராஜ் பல்கலை ரூசா திட்ட ஒருங்கிணைப்பாளர் குமரேசன் தலைமை வகித்தார். தியாகி அழகன்பெருமாள் முன்னிலை வகித்தார். அறக்கட்டளை நிறுவனர் ராஜேந்திரன், இலங்கை பல்கலை பேராசிரியர்கள் பிரசாந்தன், சரவணகுமார், விரிவுரையாளர்கள் கலாநிதி, வில்வரசன், ஜீவதர்சன், ரோபிகா, மிலானி பேசினர். மாணவிகள் பாத்திமா, ஆதிலா, சஜீவினி, விவேதிகா, பிரியா, நவரத்தினம் ஜெயானி, திருவண்ணாமலை தெருக் கூத்து நாடக கலைஞர்கள் வெங்கட்ராமன், வெங்கடேசன், வேடியப்பன், தேனி வணிகர்கள் சங்க பேரமைப்பு தலைவர் செல்வகுமார், பாதம் அறக்கட்டளை நிர்வாகிகள் ஆறுமுகம், இருளன் பங்கேற்றனர். இரவில் தெருக்கூத்து நிகழ்ச்சி நடந்தது. ஆசிரியர், மாணவர், கலைஞர்களுக்கு விருது வழங்கப்பட்டன. பேராசிரியர் பூஞ்சோலை நன்றி கூறினார்.

