sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மதுரையில் சர்வதேச யோகா தினம் கொண்டாட்டம்

/

மதுரையில் சர்வதேச யோகா தினம் கொண்டாட்டம்

மதுரையில் சர்வதேச யோகா தினம் கொண்டாட்டம்

மதுரையில் சர்வதேச யோகா தினம் கொண்டாட்டம்


ADDED : ஜூன் 22, 2025 03:05 AM

Google News

ADDED : ஜூன் 22, 2025 03:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: சர்வதேச யோகா தினத்தையொட்டி மதுரையில் பள்ளி, கல்லுாரிகள், நீதிமன்றங்கள் உள்ளிட்ட இடங்களில் யோகா பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.

பள்ளி, கல்லுாரி


மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரியில் துணை முதல்வர் குருபாஸ்கர், டீன் அகாடமிக்ஸ் டாக்டர் பிரியா, யோகா பயிற்றுனர் ஸ்ரீதேவி யோகாவின் முக்கியத்துவம், நன்மை பற்றி பேசினர். ஆசிரியர்கள், ஊழியர்கள் யோகாசனம் செய்தனர். ஏற்பாடுகளை உடற்கல்வித்துறை இயக்குனர் பாண்டியராஜன் செய்தார். மதுரை கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் சி.பி.எஸ்.இ., பள்ளியில் முதல்வர் சூரியபிரபா யோகா தினம் பற்றி பேசினார். மாணவர்கள் யோகா பயிற்சி செய்தனர்.

அவனியாபுரம் எஸ்.பி.ஜெ. மெட்ரிக் பள்ளியில் தாளாளர் அபர்ணா, செயலாளர் பழனிச்சாமி, ஆசிரியர்கள், மாணவர்கள் யோகாசனம் செய்தனர். மறவன்குளம் மெப்கோ ஸ்லெங்க் மெட்ரிக் பள்ளியில் முதல்வர் ஈஸ்டர் ஜோதி தலைமை வகித்தார். ஆசிரியர்கள் தமிழரசி, சுபாஷ் யோகாவின் முக்கியத்துவம் குறித்து பேசினர்.

சவுராஷ்டிரா கல்லுாரி செயலர் குமரேஷ் தலைமை வகித்தார். நிர்வாக குழு உறுப்பினர் வெங்கடேஸ்வரன், பன்சிதர், பொருளாளர் பாஸ்கர், முதல்வர் ஸ்ரீனிவாசன் முன்னிலை வகித்தார். யோகாவின் பயன்கள், முக்கியத்துவம் குறித்து அர்ஜூன் சிங் பேசினார். பேராசிரியர்கள் ஞானேஸ்வரன், கார்த்திக், கவிதா கலந்து கொண்டனர். பேராசிரியர் செந்தில்குமார் ஒருங்கிணைத்தார். பொன்ராஜ் நன்றி கூறினார். மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் 7 தமிழ்நாடு பட்டாலியன் தேசிய மாணவர் படை சார்பில் 500க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.

பேராசிரியர் சோமசுந்தரம் பயிற்சி அளித்தார். மதுரை குரூப் கமாண்டர் கர்னல் சவுஹான், கமாண்டிங் ஆபீஸர் கர்னல் சமித் கார்க்கி, நிர்வாக அதிகாரி கர்னல் ஷீகாந்த் கலந்து கொண்டனர். கல்லுாரி என்.சி.சி. அலுவலர் பேராசிரியர் சுரேஷ்பாபு ஏற்பாடுகள் செய்தார்.

திருப்பரங்குன்றம் தியாகராஜர் ஸ்கூல் ஆப் மேனேஜ்மென்ட் கல்லுாரியில் உடற்கல்வி இயக்குநர் சிராஜுதீன் தொடங்கி வைத்தார்.

உதவி பேராசிரியர்கள் நச்சிகேதாஸ், நடராஜ் யோகாசன, மூச்சுப் பயிற்சி அளித்தனர். முதல்வர் செல்வலட்சுமி, டீன்கள் பாலாஜி, கவுதம் கலந்து கொண்டனர்.

நீதிமன்றம், ரயில்வே


உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதிகள் பி.புகழேந்தி, எஸ்.ஸ்ரீமதி, ஆர்.பூர்ணிமா, பதிவாளர்கள் அப்துல் காதர்(நீதித்துறை), பிரேம்குமார் (நிர்வாகம்) மற்றும் அலுவலர்கள், சி.ஐ.எஸ்.எப்.,வீரர்கள் யோகா பயிற்சி செய்தனர். மாவட்ட நீதிமன்றத்தில் முதன்மை நீதிபதி சிவகடாட்சம் தலைமையில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் ஊழியர்கள் யோகா செய்தனர். மதுரை ரயில்வே காலனி மைதானத்தில் கோட்ட மேலாளர் சரத்ஸ்ரீவத்சவா யோகா பயிற்சியை துவக்கி வைத்தார்.

கூடுதல் கோட்ட மேலாளர் எல்.என்.ராவ், 'கதி சக்தி' முதன்மை திட்ட மேலாளர் ஹரிகுமார், கோட்ட பணியாளர் அதிகாரி சங்கரன், அலுவலர்கள், ரயில்வே பாதுகாப்பு படையினர் யோகா செய்தனர். திண்டுக்கல் காந்திகிராமம் கிராமிய பல்கலை பேராசிரியர் ரவிச்சந்திரன் யோகா பயிற்றுவித்தார்.

மதுரை அரசு மருத்துவக் கல்லுாரி மைதானத்தில் நர்சிங், மருந்தியல் கல்லுாரி மாணவர்கள் யோகாசனம், சுவாச பயிற்சியில் ஈடுபட்டனர். நிலைய மருத்துவ அலுவலர் சரவணன் பேசுகையில்,'' யோகாசனங்கள் உடல்நோயை குணப்படுத்துவதற்கான உயிரியல் அடிப்படையை உருவாக்குகிறது'' என்றார். டீன் அருள் சுந்தரேஷ்குமார், துணை முதல்வர் மல்லிகா, அரசு மருத்துவமனை யோகா மற்றும் இயற்கை மருத்துவர் நாகராணி நாச்சியார் ஏற்பாடுகளை செய்தனர்.

காந்தி மியூசியத்தில் நடந்த விழாவில் செயலாளர் நந்தாராவ் தலைமை வகித்தார். ஆராய்ச்சி அலுவலர் தேவதாஸ், எத்தியோப்பியா பேராசிரியர் சேனாபதி, இந்திய செஞ்சிலுவை சங்க மதுரை மாவட்ட செயலாளர் ராஜ்குமார் பேசினர். கோடைகால யோகா பயிற்சி முடித்தவர்களுக்கு பாரத ஸ்டேட் வங்கி அலுவலர் ஓய்வு அரவிந்தலோஷன் சான்றிதழ் வழங்கினார். யோகா ஆசிரியர் சிபி சக்கரவர்த்தி பயிற்சி அளித்தார். கல்வி அலுவலர் நடராஜன், ஒருங்கிணைப்பாளர் ஜான்சன், இணை ஒருங்கிணைப்பாளர் ஒலிவா,யோகா ஆசிரியர்கள் நந்தினி, பழனிகுமார், லோகபிரியா, மணிமாறன் கலந்து கொண்டனர். மதுரை மாவட்ட சர்வோதய சங்கத்தில் செயலாளர் கண்ணன் தலைமையில் ஊழியர்கள் யோகா பயிற்சி செய்தனர்.

சோழவந்தான்


திருவேடகம் விவேகானந்தா கல்லுாரியில் முதல்வர் கார்த்திகேயன் வரவேற்றார். ஜி.எஸ். உடற்கல்வி கல்லுாரி முதல்வர் செல்வம் யோகப் பயிற்சியின் அவசியம், நன்மை குறித்து பேசினார். செயலர் சுவாமி வேதானந்த, குலபதி, சுவாமி அத்யாத்மானந்த ஆசியுரை வழங்கி பேசினர். உடற்கல்வி இயக்குனர் நிரேந்திரன், யோகா ஆசிரியர் இருளப்பன், அகத்தர உறுதி மைய ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் சுவாமிநாதன் பேசினார். துணை முதல்வர் சந்திரசேகரன் ஒருங்கிணைத்தார்.

திருநகர்


தனக்கன்குளம் யோகாநகர் சுவாமி சிவானந்தா யோகாசன ஆய்வு மையம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு யோகாசன சங்க தலைவர் யோகிராமலிங்கம் தலைமை வகித்தார். '40 மாவட்டங்களிலும் 4 லட்சம் பேர் ஒரே நேரத்தில் யோகாசன பயிற்சி செய்தனர்' என்றார். பா.ஜ., திருப்பரங்குன்றம் நகர் மண்டல் சார்பில் தென்பரங்குன்றத்தில் மண்டல தலைவர் வேல்முருகன் தலைமையில் நிர்வாகிகள் ராக்கப்பன், முருகன், கபிலன், பாண்டியராஜன், வெற்றிவேல்முருகன், மணிகண்டன், கோதண்டராமன் உள்பட நுாற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us