ADDED : ஆக 14, 2025 03:01 AM
மதுரை: மதுரை புதுார் தொழிற்பேட்டையில், குறு, சிறு, நடுத்தர (எம்.எஸ்.எம்.இ.,) தொழில் நுட்ப மேம்பாட்டு விரிவாக்க மையம் சார்பில் ஆக. 16, 17ல் ஏற்றுமதி, இறக்குமதிக்கான பயிற்சி, ஆக. 23, 24ல் டிஜிட்டல் மார்க்கெட்டிங், ஜி.எஸ்.டி., பிராக்டிஷனர் பயிற்சிகள் காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை நடக்கிறது. 10ம் வகுப்பு படித்த, 18 வயது நிரம்பிய இருபாலர்கள் சேரலாம். ஏற்றுமதி, இறக்குமதி, டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சிகளுக்கு ரூ.3540 கட்டணம், ஜி.எஸ்.டி., பயிற்சிக்கு ரூ.2360 கட்டணம்.
டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சியில் வலைதளம், ப்ளாகிங், தேடுபொறி மேம்பாடு, மார்க்கெட்டிங், கூகுள் அட்வேர்ஸ், கருத்துருவாக்கம், ஆன்லைனில் விளம்பரம் செய்தல் குறித்து கற்றுத்தரப்படும். ஜி.எஸ்.டி., குறித்தும் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி முடிவில் மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படும். முன்பதிவு அவசியம். விவரங்களுக்கு 86956 46417ல் தொடர்பு கொள்ளலாம்.