தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/மயானத்திற்கு அடிப்படை வசதி கிடைக்குமா

மயானத்திற்கு அடிப்படை வசதி கிடைக்குமா

மயானத்திற்கு அடிப்படை வசதி கிடைக்குமா


UPDATED : நவ 10, 2026 10:06 AM

ADDED : நவ 10, 2026 10:02 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 10, 2026 10:06 AM ADDED : நவ 10, 2026 10:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சோழவந்தான்: காடுபட்டி ஊராட்சி வடகாடுபட்டியில் ஆதிதிராவிடர் மயானத்திற்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டுமென அப்பகுதியினர் கோரிக்கை விடுத்தனர்.

இங்கு விக்கிரமங்கலம், மேலக்கால் ரோட்டில் ஆதிதிராவிடர் காலனி மயானம் பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.

இதில் வெறும் மயான கூரை மட்டுமே அமைந்துள்ளது.

இறுதிச்சடங்குகளின் போது மக்கள் மிகுந்த சிரமம் அடைகின்றனர். தற்போது பராமரிப்பின்றி சுற்றிலும் செடி, கொடிகள் அடர்ந்து புதராக காட்சியளிப்பதுடன் விஷ ஜந்துக்களின் வசிப்பிடமாக மாறிவிட்டது. ஒன்றிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சீரமைக்க வேண்டுமென அப்பகுதியினர் வலியுறுத்துகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us