ADDED : ஜூன் 15, 2025 05:37 AM
திருப்பரங்குன்றம் : ஹார்விபட்டி ஸ்ரீமான் எஸ்.ஆர்.வி. மக்கள் நல மன்றம் சார்பில் மாணவர்களுக்கு 19வது ஆண்டாக இலவச நோட்டு, எழுது பொருள் வழங்கும் விழா தலைவர் அய்யல்ராஜ் தலைமையில் நடந்தது.
துணை தலைவர் காளிதாசன், நிர்வாகிகள் வள்ளியப்பன், கிருஷ்ணசாமி, குலசேகரன் முன்னிலை வகித்தனர். பொருளாளர் அண்ணாமலை வரவேற்றார். முன்னாள் எம்.எல்.ஏ., ராஜேந்திரன், திருப்பரங்குன்றம் கோயில் அறங்காவலர் சண்முகசுந்தரம், 500க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இலவச நோட்டு, எழுது பொருள் வழங்கினர். மாநகராட்சி கவுன்சிலர் விஜயா, தொழிலதிபர் விஜயன், சமூக ஆர்வலர் நாகராஜன், தென் மண்டல ரயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் சிவசுந்தரம், ராமச்சந்திரன், மக்கள் நல மைய தலைவர் செல்வராஜ், மன்னர் கல்லுாரி ஆட்சி மன்ற குழு உறுப்பினர் ரங்கராஜ், திருநகர் மக்கள் மன்ற துணை தலைவர் பொன் மனோகரன், கே.பி. விளையாட்டு குழு நிறுவனர் பாஸ்கர்பாண்டி, இளைஞரணி அரவிந்தன் கலந்து கொண்டனர். குஜராத் விமான விபத்தில் இறந்தவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.