ADDED : பிப் 15, 2024 05:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி: வாடிப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன் வழங்கினார். துணைத் தலைவர் கார்த்திக், கவுன்சிலர் ஜெயகாந்தன் முன்னிலை வகித்தனர்.
இந்த அடையாள அட்டை மூலம் வியாபாரிகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் இருந்து ரூ.10 ஆயிரம் கடனாக பெறலாம் என தெரிவிக்கப்பட்டது. சுகாதார பணி மேற்பார்வையாளர் முத்தழகு நன்றி கூறினார்.

