/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஓய்வுபெற்ற அதிகாரி ஏ.டி.எம்., கார்டை திருடி ரூ.2.80 லட்சம் நகைகள் வாங்கிய இருவர் கைது திருடியது அறியாமல் விசாரிக்க உடன் அழைத்துச்சென்ற பரிதாபம்

ADDED : டிச 22, 2024 07:09 AM

மதுரை : மதுரையில் ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரியின் ஏ.டி.எம். கார்டை திருடி ரூ.2.80 லட்சத்திற்கு நகைகள் வாங்கிய காய்கறி கடைக்காரர், அவரது தோழியான டெய்லர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை எல்லீஸ்நகர் ஹவுசிங் போர்டில் வசிப்பவர் கிருஷ்ணசாமி 72. ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரி. பிள்ளைகள் வெளிநாடுகளில் இருப்பதால் இங்கு தனியாக வசிக்கிறார். இவருக்கும், அப்பகுதியில் காய்கறி கடை நடத்தும் லட்சுமணனுக்கும் 10 ஆண்டுகளாக பழக்கம்.
அவ்வப்போது கிருஷ்ணசாமிக்கு வேண்டிய உதவிகளை லட்சுமணன் 30, செய்து வந்தார். டிச.,12ல் வங்கிக்கு சென்றுவிட்டு லட்சுமணனின் கடைக்கு வந்த கிருஷ்ணசாமி, உணவு வாங்கி வருமாறு லட்சுமணனை அனுப்பினார்.
சிறிது நேரத்தில் பார்சலுடன் வந்த லட்சுமணன், அதை கிருஷ்ணசாமியின் பையில் வைத்தார். அதில்தான் ஏ.டி.எம்., கார்டு இருந்தது. வீட்டிற்கு திரும்பிய கிருஷ்ணசாமி, ஏ.டி.எம்., கார்டை தேடியபோது காணவில்லை. மறதியாக எங்கேயாவது வைத்திருப்போம் எனக்கருதி தேடினார்.
இந்நிலையில் டிச.,15ல் நகைக்கடை ஒன்றில் வங்கி கணக்கில் இருந்து ரூ.2.80 லட்சத்திற்கு நகைகள் வாங்கியதாக எஸ்.எம்.எஸ்., வந்தது. அதிர்ச்சியடைந்த கிருஷ்ணசாமி இதுகுறித்து லட்சுமணனிடம் கூறினார். அவருடன் வங்கிக்கு சென்று ஏ.டி.எம்., கார்டை 'லாக்' செய்தார். பின்னர் எஸ்.எம்.எஸ்., அனுப்பிய நகைக்கடைக்கு சென்று விசாரித்தபோது ஏ.டி.எம்., கார்டு மூலம் பெண் ஒருவர் 4 பவுன் நகைகள் எடுத்தது தெரிந்தது.
லட்சுமணனிடம் இதுகுறித்து கிருஷ்ணசாமி கூறியபோது அவரை சமரசம் செய்தார். தனது தோழியான பைபாஸ் ரோடு நேரு நகர் குருசாமி மனைவி டெய்லர் நாகேஸ்வரியை 38, அழைத்துவந்து 'நாங்கள் உங்களது நகையை கண்டுபிடித்து தருகிறோம்' என கூறியபோது கிருஷ்ணசாமிக்கு சந்தேகம் எழுந்தது.
போலீசில் புகார் செய்ய உள்ளதாக அவர் கூறியதும் பதட்டமடைந்த இருவரும், 'உங்கள் ஏ.டி.எம்., கார்டை திருடி ரூ.2.80 லட்சத்திற்கு நகைகள் வாங்கி, ரூ.1.70 லட்சத்திற்கு அடகு வைத்துள்ளோம்' என்றனர்.
இதுகுறித்து எஸ்.எஸ்.காலனி போலீசில் கிருஷ்ணசாமி புகார் செய்தார். லட்சுமணன், நாகேஸ்வரி கைது செய்யப்பட்டனர்.