/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நடுரோட்டிலதான்... நல்லா 'பார்க்கிங்'தான்... கப்பலுார் டோல்கேட்டில் அவலம்
/
நடுரோட்டிலதான்... நல்லா 'பார்க்கிங்'தான்... கப்பலுார் டோல்கேட்டில் அவலம்
நடுரோட்டிலதான்... நல்லா 'பார்க்கிங்'தான்... கப்பலுார் டோல்கேட்டில் அவலம்
நடுரோட்டிலதான்... நல்லா 'பார்க்கிங்'தான்... கப்பலுார் டோல்கேட்டில் அவலம்
ADDED : பிப் 18, 2024 01:09 AM

திருமங்கலம்: கப்பலுாரில் விதிமுறைகளை மீறி திருமங்கலம் நகரிலிருந்து 1.5 கி.மீ., துாரத்தில் அமைக்கப்பட்டுள்ள டோல்கேட்டில் போதிய இடவசதி, ஓய்வு எடுப்பதற்கான வசதிகள் இல்லாத நிலையில் விரும்பும் இடத்தில் நிறுத்தி டிரைவர்கள் ஓய்வெடுப்பதால் விபத்து அபாயம் ஏற்படுகிறது.
பொதுவாக டோல்கேட்டில் வாகனங்களை நிறுத்தி ஓய்வு எடுப்பதற்கான வசதி செய்யப்பட்டிருக்கும். ஆனால் கப்பலுார் டோல்கேட்டில் இவ்வசதி இல்லை. சர்வீஸ் ரோட்டை டோல்கேட் நிர்வாகமே ஆக்கிரமித்துள்ளதால் அங்கு வாகனங்கள் நிறுத்த முடியாத நிலை உள்ளது.
அதேபோல் திருமங்கலத்தில் இருந்து டோல்கேட்டை கடந்தவுடன் கப்பலுார் பாலத்திற்கு கீழ் வழியாக டவுன் பஸ்கள் செல்லும் பாதையிலும் வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருப்பதால் அவ்வப்போது பஸ்கள், அந்த வழியாக செல்லும் டூவீலர்கள் சிறிய ரக வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
இருநாட்களுக்கு முன் பெரிய கண்டெய்னர்களை ஏற்றி செல்லும் லாரி கப்பலுார் பாலத்தில் இருந்து டோல்கேட்டிற்கு வரும் பாதையில் உள்ள சென்டர் மீடியனை கணக்கிட்டு நடுவில் நிறுத்தப்பட்டிருந்தது. அதன் பின்புறம் அப்படியே டோல்கேட் மீது வாகனங்கள் மோதாமல் இருக்க தடுப்புகள் வைக்கப்பட்டு உள்ளன. உள்ளூர் வாகனங்கள் கட்டணம் செலுத்தாமல் செல்ல முற்படும் போது அல்லது வேறு ஏதேனும் சிறு பிரச்னைகள் என்றால் கூட கொந்தளிக்கும் டோல்கேட் ஊழியர்கள் இதுபோன்ற விதிமீறும் வாகனங்களை கண்டு கொள்வதே இல்லை.
மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து இந்த டோல்கேட்டை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.