ADDED : ஜூன் 10, 2025 01:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர்: பேரையூரில் பலாப்பழம் விற்பனை அமோகமாக நடக்கிறது. கடலுார் மாவட்டம் பண்ருட்டி, கேரளாவில் இருந்தும் பலாப்பழம் இங்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
ஆண்டுதோறும் ஏப்ரல் முதல் ஜூலை வரை பலாப்பழம் அறுவடை நடப்பது வழக்கம். அதன்படி நடப்பாண்டு அறுவடை களை கட்டியுள்ளது. தினசரி லாரிகளில் பலாப்பழம் பேரையூருக்கு வருகிறது. வரத்து அதிகரிப்பால் சில்லரை விலையில் கிலோ ரூ.30க்கு விற்கப்படுகிறது.