ADDED : ஏப் 15, 2025 06:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டி.கல்லுப்பட்டி: டி.கல்லுப்பட்டி அருகே நல்லமரம் புண்ணியமூர்த்தி திரௌபதி அம்மன் கோயிலின் பொங்கல் விழா மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடந்தது.
பல்வேறு மாவட்டங்களில் இருந்து 655 காளைகள் பங்கேற்றன.
260 மாடுபிடி வீரர்கள் பங்கேற்று காளைகளை அடக்கினர். விழா கமிட்டி சார்பில் பீரோ, கட்டில், சைக்கிள், அண்டா உள்ளிட்ட பல்வேறு பொருட்களை பரிசாக வழங்கினர். போட்டியை தி.மு.க தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன், உசிலம்பட்டி ஆர்.டி.ஓ., சண்முகவடிவேல் துவக்கி வைத்தனர். பெரியஊர்சேரி பால்பாண்டி 28 மாடுகளை அடக்கி டூவீலரை பரிசாக பெற்றார். கொடைரோடு கண்ணன் காளை முதல் பரிசாக ஒரு பவுன் தங்கம் வென்றது. உசிலம்பட்டி டி.எஸ்.பி. சந்திரசேகரன் தலைமையிலான 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.