/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
'தொட்டுப்பார்' என தொட்டப்பநாயக்கனுாரில் சீறிய காளைகள் களை கட்டிய ஜல்லிக்கட்டு
/
'தொட்டுப்பார்' என தொட்டப்பநாயக்கனுாரில் சீறிய காளைகள் களை கட்டிய ஜல்லிக்கட்டு
'தொட்டுப்பார்' என தொட்டப்பநாயக்கனுாரில் சீறிய காளைகள் களை கட்டிய ஜல்லிக்கட்டு
'தொட்டுப்பார்' என தொட்டப்பநாயக்கனுாரில் சீறிய காளைகள் களை கட்டிய ஜல்லிக்கட்டு
ADDED : பிப் 13, 2024 04:12 AM

உசிலம்பட்டி : உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனுார் ஜக்கம்மாள் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடந்தது. 632 காளைகள், 400 மாடுபிடி வீரர்கள் முன்பதிவு செய்திருந்தனர்.
அருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்கள் 10க்கும் மேற்பட்ட காளைகளை கொண்டு வந்தனர். முதன்மை காளைகளை மட்டுமே வாடிவாசல் வழியாக அனுப்பப்படும். மற்றவர்கள் முறைப்படி வரிசைக்கு கொண்டு செல்லுங்கள் என விழா கமிட்டியினர் தெரிவித்ததால் குழப்பம் ஏற்பட்டது.
போலீசார் தடியடி நடத்தி அவர்களை மாடுகளை பிடித்து வெளியேற கூறினர். இதன் காரணமாக அரை மணி நேரம் தாமதமாக ஜல்லிக்கட்டு துவங்கியது.
உசிலம்பட்டி ஆர்.டி.ஓ., ரவிச்சந்திரன், தாசில்தார் சுரேஷ்பிரடரிக்கிளமண்ட், டி.எஸ்.பி., நல்லு, ஜமீன்தார் பாண்டியர் முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றபின் போட்டி துவங்கியது.
ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகர், ஊராட்சித் தலைவர் பாலமுருகமகாராஜா, பாரதிய பா.பி., தலைவர் முருகன்ஜி, ஒருங்கிணைப்பாளர் சோலைரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
8 சுற்றுகளாக நடந்த போட்டியில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாமல் அச்சுறுத்திய காளைகளுக்கும் சைக்கிள், டேபிள் உள்ளிட்ட பரிசுகள் வழங்கினர்.
ரயிலில் அடிபட்டு பலி
ஜல்லிக்கட்டில் பங்கேற்ற மதுரை வில்லாபுரம் சுரேஷ் 25, என்பவரது காளை சேகரிப்பு மையத்திற்குள் பிடிக்க முடியாமல் வெளியேறி, அருகில் உள்ள மதுரை- - போடி ரயில்பாதை வழியாக ஓடியது. அப்போது ரயிலில்அடிபட்டு இறந்தது.
இதே போல மற்றொரு காளை அருகில் இருந்த கிணற்றில் தவறி விழுந்தது.தீயணைப்பு வீரர்கள், போலீசார் மீட்டனர்.
துணை தாசில்தார் உட்பட 47 பேர் காயம்
8 சுற்றுகளாக நடந்த போட்டியில் 493 காளைகளும், 400 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.சிறந்த காளைக்கான மினி சரக்கு வாகனம் குலமங்கலம் திருப்பதி காளைக்கும், 9 காளைகளை அடக்கிய பேச்சியம்மன் கோவில்பட்டி கனிக்கு ஆட்டோவும் பரிசாக வழங்கப்பட்டது.
2ம் பரிசாக திருப்பத்துார் சீமான் முரசு காளைக்கும், 6 காளைகளை பிடித்த கீரிபட்டி சிவனேஸ்வரனுக்கும் டூவீலரும் பரிசாக வழங்கினர்.
மாடுபிடி வீரர்கள் பார்வையாளர்கள், உசிலம்பட்டி துணை தாசில்தார் தாணுமூர்த்தி உள்ளிட்ட 47 பேர் காயமடைந்தனர். இதில் 7 பேர் சிகிச்சைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.