ADDED : டிச 06, 2025 05:49 AM
மதுரை: மதுரை மாவட்டத்தில் அ.தி.மு.க., சார்பில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
மதுரையில் அ.தி.மு.க., சார்பில் ஜெயலலிதாவின் ஒன்பதாம் ஆண்டு நினைவுதினம் நிகழ்ச்சி நடந்தது. இதில் அஞ்சலி செலுத்தி அன்னதானம் வழங்கிய மாநில மருத்துவரணி இணைச் செயலாளர் சரவணன் கூறியதாவது:
ஜெயலலிதா, பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க., ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. மாணவர்களுக்கு மடிக்கணினியுடன் 14 வகை கல்வி உபகரணங்கள், தாலிக்குத் தங்கம் உள்பட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.
ஆனால் தற்போது தி.மு.க., ஆட்சியில் எங்கு பார்த்தாலும் கமிஷன், கரப்ஷன், கலெக் ஷன் என மழை நீர் வடிகால், மணல் என பஞ்சபூதங்களிலும் ஊழல் நடக்கிறது. விரைவில் தேர்தல் வருவதால் மக்களை பற்றி சிந்திப்பதாக முதல்வர் பாசாங்கு காட்டுகிறார். இவ்வாறு அவர் கூறினார்.
* திருப்பரங்குன்றத்தில் மதுரை கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., இளைஞரணி மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் முருகன் முன்னிலை வகித்தார். செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., அன்னதானம் வழங்கினார். நிர்வாகிகள் சேதுராமன், செல்வகுமார், மோகன்தாஸ், பாலா, பாலமுருகன் பங்கேற்றனர்.
* வாடிப்பட்டியில் பேரூராட்சி செயலாளர் அசோக்குமார் தலைமை வகித்தார். துணைச் செயலாளர் சந்தனத்துரை, இணைச் செயலாளர் ராமசாமி, பேரவை செயலாளர் தனசேகரன் முன்னிலை வகித்தனர். கவுன்சிலர் இளங்கோவன் வரவேற்றார். வார்டு செயலாளர்கள் ராஜேந்திரன், பாண்டி, ரங்கராஜன் பங்கேற்றனர். நிர்வாகி வேல்முருகன் நன்றி கூறினார்.
* மேலுார் பஸ் ஸ்டாண்ட் முன்பு நடந்த நிகழ்ச்சியில், நகர் செயலாளர் சரவணகுமார் தலைமை வகித்தார். ஜெ., பேரவை செயலாளர் சாகுல் ஹமீது முன்னிலை வகித்தனர். வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் திருமேனி, நகர் துணைச் செயலாளர் பாண்டி லட்சுமி பங்கேற்றனர்.
* கொட்டாம்பட்டி பஸ் ஸ்டாண்ட் முன்பு அவைத் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நிர்வாகிகள் ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்தனர்.
* சோழவந்தான் மன்னாடிமங்கலத்தில் அ.தி.மு.க.,வினர் மரக்கன்றுகள் நட்டனர். ஜெ., படத்திற்கு மாலை அணிவித்தனர். ஒன்றிய செயலாளர் கணேசன் தலைமை வகித்தார். கிளைச் செயலாளர்கள் ராஜபாண்டி, ராமு, பிரபாகரன் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் அழகுமலை, ஜானகிராமன், காமாட்சி,பாண்டி, சக்திவேல் பங்கேற்றனர்.

