நகை மதிப்பீட்டாளர், டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சிகள்
நகை மதிப்பீட்டாளர், டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சிகள்
UPDATED : நவ 02, 2026 07:59 PM
ADDED : நவ 02, 2026 07:55 PM
மதுரை: புதுார் தொழிற்பேட்டை எம்.எஸ்.எம்.இ., தொழில் நுட்ப மேம்பாட்டு விரிவாக்க மையத்தில், இளைஞர்களுக்கான தங்க நகை மதிப்பீட்டாளர், டிஜிட்டல் மார்க்கெட்டிங் தொழிற் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
நவ.23 முதல் 27 வரை நடத்தப்படும் நகை மதிப்பீட்டு பயிற்சியில், சுத்த தங்கம் கணக்கிடும் முறை, உலோகவியல், கடன் தொகை வழங்கும் முறைகள், தரம் பார்த்தல் கற்பிக்கப்படும். தேசிய கூட்டுறவு மற்றும் தனியார் வங்கிகளில் மதிப்பீட்டாளராக வேலைவாய்ப்பு, சுய தொழிலாக நகை அடகு வியாபாரம் செய்ய இப்பயிற்சி உதவும். சுயதொழில் விரும்புவோருக்கு கடனுதவி ஆலோசனை வழங்கப்படும். கட்டணம் ரூ.8,500.
நவ.21, 22ல் நடக்கும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சியில் வெப்சைட் ப்ளாக்கிங், சர்ச் என்ஜின் ஆப்டிமைசேஷன், சர்ச் என்ஜின் மார்க்கெட்டிங், பி.பி.சி., – கூகுள் அட்வேர்ஸ், ஆன்லைன் அட்வெர்டைசிங் கற்பிக்கப்படும். கட்டணம் ரூ.3,540.
இரு பயிற்சிகளும் காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை நடைபெறும். 18 வயதுக்கு மேல், 10ம் வகுப்பு படித்த இருபாலரும் பங்கேற்கலாம். பயிற்சிக்குப் பின் மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படும். விரும்புவோர் 86956 46417ல் பதிவு செய்யலாம்.
