UPDATED : நவ 02, 2026 07:50 PM
ADDED : நவ 02, 2026 07:47 PM
அ நிறம் | அளவு
மதுரை: மாநகராட்சி மண்டலம் 5 க்குட்பட்ட வில்லாபுரம், செந்தமிழ்த் தெரு, பராசக்தி நகரில் மாநில நிதிக்குழு மானியத்தில் ரோடுகள் அமைப்பது தொடர்பாக மாநகராட்சி கமிஷனர் கவுரவ்குமார் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் வெள்ளைக்கல்லில் குப்பையில் இருந்து இயற்கை வாயு தயாரிப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய ஆயத்த பணிகளையும் பார்வையிட்டார். செயற்பொறியாளர்கள் மோகன், அசோக், உதவிசெயற்பொறியாளர் மயிலேறிநாதன், சுகாதார அலுவலர் திருமால் உடனிருந்தனர்.
