
ரோட்டில் கழிவுநீர்
மதுரை சூர்யா நகர் பஸ் ஸ்டாப் எதிரே கணேஷ் நகர் ரோட்டில் கழிவுநீர் 4 நாட்களாக வெளியேறுகிறது. துர்நாற்றம் வீசுவதோடு, நோய்த் தொற்று அபாயம் உள்ளது. மாநகராட்சி துரிதப் படுத்தி கழிவுநீர் வெளியெறுவதைத் தடுக்க வேண்டும்.
-ராஜா, சூர்யா நகர்
மதுக்கடையை அகற்றுங்க
தோப்பூரில் இருந்து நகருக்குள் வரும் ரோட்டில் சீதாலட்சுமிநகர் -முல்லை நகர் பஸ் ஸ்டாப்களின் இடையே மதுக்கடை உள்ளது. இப்பகுதியில் சிலர் போதையில் ரோட்டின் நடுவே வாகனங்களை நிறுத்துகின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர். விபத்து வாய்ப்புள்ளதால், மதுபானக் கடையை இடம் மாற்ற வேண்டும்.
-பழனிவேல், திருநகர்
அடிப்படை வசதி இல்லை
மதுரை ஆனையூர் ஸ்ரீநகர், தியாகி மலையான் பகுதியில் பாதாளச் சாக்கடை, குடிநீர் இணைப்பு திட்டம் 20 வீடுகளுக்கு விடுபட்டுள்ளது. அதிகாரிகளிடம் புகார் அளித்தும் பலன் இல்லை. பன்றிகள்தொல்லை அதிகம் உள்ளது. தெரு விளக்கு இல்லாததால் திருட்டு நடக்கிறது. அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
-பாலமுருகன், ஆனையூர்