ADDED : டிச 28, 2024 06:18 AM

வாடிப்பட்டி : வாடிப்பட்டியில் பிரஜாபிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் சார்பில் 12 ஜோதிர் லிங்க தரிசன துவக்க விழா நடந்தது. நாளை(டிச.29) வரை நடக்கும் தரிசனத்திற்கு அனுமதி இலவசம். அமைப்பின் துணை மண்டல ஒருங்கிணைப்பாளர் உமா தலைமை வகித்தார். பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன், சத்வோதயா மண்டல தலைவர் சுந்தர்ராஜன், ஓய்வுபெற்ற அரசு டாக்டர் சீதாலட்சுமி முன்னிலை வகித்தனர்.
ராஜயோக ஆசிரியர் செந்தாமரை வரவேற்றார். திருவேடகம் ராமகிருஷ்ணா ஆசிரம சுவாமி பரமானந்த மகராஜ் துவக்கி வைத்தார். தியான கூடம், திறன் விளையாட்டு, ஆன்மிக அறிவியல், படவிளக்க கண்காட்சி, 12 ஜோதிர் லிங்கங்கள் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. டாக்டர் பொன் யாழின, வழக்கறிஞர்கள் செல்வகுமார், கார்த்திகேயன், லயன்ஸ் சங்கத் தலைவர் பாபு சரவணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

