UPDATED : நவ 21, 2026 06:16 PM
ADDED : நவ 21, 2026 06:16 PM
அ நிறம் | அளவு
புதுார்:
மதுரை புதுார் மண்மலை மேடு பகுதியில் உள்ள கல்குளம் கண்மாய் 2.75 ஏக்கர் பரப்பளவு கொண்டது. ஆத்திகுளம், ராமவர்மா நகர், சங்கர் நகர் பகுதியிலிருந்து வரும் மழை நீர் தேங்கும் இடமாக இருந்து வந்தது. தற்போது இக்கண்மாய் பல ஆண்டுகளாக துார்வாரப்படாமல் ஆக்கிரமிப்பில் சிக்கித் தவிக்கிறது.
மழை காலங்களில் ஆத்திகுளம் கண்மாயிலிருந்து ராமவர்மா நகர், தேசிய விநாயகர் கோயில் தெரு, மாதா கோவில் தெரு, காந்திபுரம் வழியாக வண்டியூர் கண்மாய்க்கு தண்ணீர் சென்று சேரும். தொடர்ந்து கண்மாய் இடங்கள் ஆக்கிரமிப்பால் சிக்கி ஒரு ஏக்கர் பரப்பளவு மட்டுமே தற்போது காணப்படுகிறது. பிளாஸ்டிக் கழிவுகள் நிறைந்து காணப்படுகின்றன. ஆக்கிரமிப்புகளை அகற்றி கண்மாயை சுத்தம் செய்ய மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
