/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கழிப்பிடமாக மாறிய கல்லம்பட்டி ரோடு
/
கழிப்பிடமாக மாறிய கல்லம்பட்டி ரோடு
ADDED : நவ 23, 2025 03:55 AM
மேலுார்: கல்லம்பட்டி ரோட்டை மக்கள் கழிப்பறையாக பயன்படுத்துவதால் ரோட்டை பயன்படுத்துவோரின் சுகாதாரம் கேள்விக்குறியாகி வருகிறது.
கல்லம்பட்டியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இக்கிராமத்தை சேர்ந்த பல ஆயிரம் பேர் தினமும் பள்ளி, கல்லுாரி, தொழிற்சாலை என ரோட்டை தொடர்ந்து பயன்படுத்துகின்றனர். ஆனால் ரோடு சுகாதாரமின்றி காணப்படுகிறது.
அப்பகுதி மக்கள் கூறியதாவது: கல்லம்பட்டியில் ரோட்டை கழிப்பறை போல பயன்படுத்துகின்றனர். துர்நாற்றத்துடன் சுகாதார சீர்கேடாகி, தொற்றுநோய் பரவும் அபாயம் நிலவுகிறது.
முழு சுகாதார கிராமம் என ஊராட்சி சார்பில் அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். ஆனால் ரோட்டில் நடக்க முடியாத அளவு முகம் சுளிக்கும் நிலை உள்ளது. ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
ஊராட்சி செயலர் ஒய்யப்பன் கூறுகையில், ''உடனே ரோடு சுத்தம் செய்யப்படும். கழிப்பறை இல்லாதோருக்கு புதிய கழிப்பறை கட்ட ஏற்பாடு செய்யப்படும். என்றார்.

