நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை கோச்சடை மயில்வேல் முருகன் கோயிலில், கந்த சஷ்டி விழா அக்., 22 காலை 9:10 மணிக்கு மேல் காப்பு கட்டுதலுடன் துவங்குகிறது.
தினமும் காலை 8:30 மணிக்கு சத்ரு சம்ஹார ஹோமம், கலச பூஜை, ருத்ராபிஷேகம் நடக்கிறது. மாலை 4:00 மணிக்கு லட்ச்சார்ச்சனை நடத்தப்பட்டு, முத்தங்கி, சந்தனகாப்பு, ராஜ அலங்காரம் உள்ளிட்ட சிறப்பு அலங்காரத்தில் முருகப் பெருமான் காட்சி தருகிறார்.
அக்., 26ல் சக்தியிடம் வேல் பெறும் வைபவம் நடக்கிறது. அக். 27 மாலை 6:30 மணிக்கு சுவாமி பூப்பல்லக்கில் புறப்பட்டு சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது. அக்., 28 காலை 8:00 மணிக்கு சாந்தி அபிஷேகம், கலசாபிஷேகம் செய்யப்பட்டு, மாலை 6:00 மணிக்கு வள்ளி, தேவசேனா, சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.