UPDATED : நவ 10, 2026 07:27 PM
ADDED : நவ 10, 2026 07:23 PM

அ நிறம் | அளவு
சோழவந்தான்: சோழவந்தான் வட்டார கோயில்களில் கந்த சஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
திருவேடகம் ஏடகநாதர் கோயிலில் முருகன், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. சுவாமிக்கு காப்பு அணிவித்து பக்தர்கள் காப்பு கட்டினர். அர்ச்சகர்கள் பிரதீப், கணேசன் பூஜை செய்தனர். விழா கமிட்டியினர் பொன்கார்த்திக், சண்முகவள்ளி,மாதேஷ், கோயில் நிர்வாகத்தினர் ஏற்பாடுகளை செய்தனர்.
தென்கரை மூலநாத சுவாமி கோயிலில் யாக பூஜைகளுடன் விழா தொடங்கியது. முருகன், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் பஜனை வழிபாடு நடந்தன. கண்ணன் பட்டர் தலைமையில் செந்தில் அர்ச்சகர் பூஜைகள் செய்தனர். சுவாமிக்கு காப்பு அணிவித்து பக்தர்கள் காப்பு கட்டி விரதம் தொடங்கினர்.
