ADDED : ஜன 10, 2025 05:24 AM

மதுரை: திருப்பூரில் தமிழ்நாடு கோஜூ ரியூ கராத்தே சம்மேளனம் சார்பில் தமிழ்நாடு கோஜூரியூ கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது.
இதில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த எப்.எப்.எப். கராத்தே பள்ளி சார்பில் பயிற்சியாளர் பாரத் தலைமையில் வீரர்கள் பங்கேற்றனர். ஹரிபிரணவ் 43 கிலோ எடை பிரிவில் வெள்ளி பதக்கம், முத்து சூரியா சீனியர் 57 கிலோ எடை பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்றனர்.
முகமது ஆதில் 67 கிலோ எடை பிரிவில் வெண்கல பதக்கம், விஸ்வநாத் 55 கிலோ எடை பிரிவில் வெண்கல பதக்கம் வென்றனர்.
கவி கோஜூரியோவை சேர்ந்த லோக வெங்கடேஷ் 15 கிலோ எடை பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்று தமிழக அணிக்காக தேர்வு பெற்றனர்.
இவர்கள் யூனியன் கோஜூ ரியூ கராத்தே சம்மேளனம் சார்பாக ஜன. 31 முதல் பிப். 2 வரை கோவையில் நடக்கவுள்ள தேசிய போட்டியில் தமிழக அணி சார்பில் பங்கேற்கின்றனர். நிர்வாகிகள் கவிக்குமார், பாரத், மனோஜ் பிரபாகர், கவி கோஜூ ரியோ நிர்வாகி காளிதாஸ் பாராட்டினர்.