UPDATED : நவ 21, 2026 06:50 PM
ADDED : நவ 21, 2026 06:50 PM

அ நிறம் | அளவு
மதுரை: சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு இடையிலான தேசிய கராத்தே போட்டிக்கு தமிழகத்தை சேர்ந்த ஷோபுகாய் பள்ளி கராத்தே மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்திய தலைமை பயிற்சியாளர் சுரேஷ்குமார், தென் மாவட்ட கராத்தே ஒருங்கிணைப்பாளர் முத்துராஜா தலைமை வகித்தனர். 14 வயதுக்குட்பட்ட எடை மற்றும் சண்டை பிரிவுகளில் கவினேஷ், மோகனவேலன், கேசவ் , தீபக், லோகேஸ்வரன், ஹரிஷ் ராமச்சந்திரா, டேரிஸ் ஜேட் ஆகியோர் தேர்வாகினர். 17 வயது எடை மற்றும் சண்டை பிரிவுகளில் ரபேல் அந்தோணி, பிரணவ், பொன்சோழன், வருணேஷ் தேர்வாகினர்.
இம்மாணவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தில் நவ.24 முதல் 28 வரை நடக்க உள்ள தேசிய போட்டியில் பங்கேற்கின்றனர்.
