/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
திடியன் மலையில் கார்த்திகை தீபம்
/
திடியன் மலையில் கார்த்திகை தீபம்
ADDED : டிச 04, 2025 07:10 AM
உசிலம்பட்டி: செல்லம்பட்டி அருகே உள்ள திடியன் பெரியநாயகி - கைலாசநாதர் கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.
ஆயிரம் மீட்டர் உயரமுள்ள திடியன் மலை உச்சியில் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. 80 மீ., துணி, 128 கிலோ நெய் கொண்டு தீபம் தயாரித்தனர். கைலாசநாதர் ஆலயத்தில் சிறப்பு வழிபாட்டைத் தொடர்ந்து மலை உச்சியில் உள்ள தங்கமலை ராமர் சந்நிதியில் வழிபாடு நடந்தது. சிறப்பு வழிபாடுகளுக்குப்பின் அ.தி.மு.க., மருத்துவ அணி மாநில துணைச் செயலாளர் விஜயபாண்டியன், பக்தர்கள் மகாதீபம் ஏற்றினர்.
தொட்டப்பநாயக்கனுார் அருகே 1000 அடி உயரமுள்ள பரமசிவன் மலையில் பழமையான பரமசிவன் கோவிலில் கார்த்திகை திருநாளை முன்னிட்டு கிராம மக்கள் 50 லிட்டர் நெய் மற்றும் 50 மீட்டர் திரி தயாரித்து கார்த்திகை தீபம் ஏற்றினர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

