/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கேள்வி மூலம் பெறும் அறிவு நம்மை மேம்படுத்தும் குழந்தைகள் இலக்கியத் திருவிழாவில் பேச்சு
/
கேள்வி மூலம் பெறும் அறிவு நம்மை மேம்படுத்தும் குழந்தைகள் இலக்கியத் திருவிழாவில் பேச்சு
கேள்வி மூலம் பெறும் அறிவு நம்மை மேம்படுத்தும் குழந்தைகள் இலக்கியத் திருவிழாவில் பேச்சு
கேள்வி மூலம் பெறும் அறிவு நம்மை மேம்படுத்தும் குழந்தைகள் இலக்கியத் திருவிழாவில் பேச்சு
ADDED : நவ 24, 2024 04:20 AM

மதுரை : ''கேள்வி மூலம் பெறக்கூடிய அறிவு நம்மை மேம்படுத்தும்'' என சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பெருமாள் முருகன் பேசினார்.
மதுரை ஓம் சாதனா மெட்ரிக் பள்ளியில் டர்னிங் பாயின்ட், ஒரு ஊர்ல அமைப்பின் சார்பில் 2 நாள் குழந்தைகளுக்கான இலக்கியத் திருவிழா நேற்று துவங்கியது.
பள்ளி முதல்வர் பரம கல்யாணி, கதைக்களம் அகாடமி நிறுவனர் வனிதாமணி, டர்னிங் பாயின்ட் நிறுவனர் உஷாராணி பங்கேற்றனர்.
எழுத்தாளர் பெருமாள் முருகன் பேசியதாவது: கேட்பது மகிழ்ச்சி தரக்கூடியது. கேள்வி கேட்பது தமிழ் மரபு. திருக்குறளில் கேள்விக்கென்று அதிகாரம் உள்ளது.
கேள்வி மூலம் பெறக்கூடிய அறிவு நம்மை மேம்படுத்தும். கதை சொல்லும் கலை, பழங்காலத்தில் ஒரு ஊர்ல என்றே ஆரம்பமாகும். ஒரு கிராமம், ஒருத்தி, தலைவன், தலைவி நம் நாட்டுப்புறக் கதைகளில் இருக்கும். அக்கதையில் நம்மை புகுத்திக் கொள்வதற்கு எளிதாக இருக்கும். தமிழ் மொழியில் குழந்தைகளுக்கான தனி புத்தகங்கள் இல்லை. மற்ற மொழிகளில் நிறைய உள்ளன. இந்த விழா அந்த இடை வெளியை நிரப்பும் என்றார். ஒரு ஊர்ல அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ப்ரீத்தி பேசுகையில், ''மூளைக்கு உடற்பயிற்சி புத்தகம் படிப்பது. புத்தகத்தை படிக்க கற்றுக் கொடுக்கவே இந்நிகழ்வு'' என்றார். நித்யா, ஜெயா, பிரதீபா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
20 எழுத்தாளர்கள் கதைகளை விளையாட்டு, பப்பட் ஷோ, இசை வழியாக குழந்தைகளுக்கு கூறினர். எழுத்தாளர் உதயசங்கரின் மந்திர தொப்பியும், சாத்விக் எழுதிய கார்ட்ஸ் ஆப் ரிக்வேதா புத்தகமும் வெளியிடப்பட்டது.இன்றும் இத்திருவிழா நடக்கிறது.