ADDED : செப் 22, 2025 03:37 AM
மதுரை :மதுரை பாத்திமா கல்லுாரியில் 'பழமைத் தடங்களில் புதுமைச் சுவடுகள்' என்ற தலைப்பில் கல்லுாரி மாணவிகளுக்கு இடையேயான (வசந்த விழா) போட்டிகள் செயலாளர் இக்னேசியஸ் மேரி, முதல்வர் பாத்திமா மேரி தலைமையில் நடந்தது.
துணை முதல்வர்கள் அருள்மேரி, பிந்து ஆண்டனி, வித்யா, நிகிலா முன்னிலை வகித்தனர். மாணவப் பேரவை துணைத் தலைவர் சுசிரஸ்மி வரவேற்றார். நடிகை ரோகிணி, பெண்கள் சமூகத்தின் விளக்காக, உண்மை எனும் ஒளியாக திகழ வேண்டும். பிறருக்கு கலங்கரை விளக்காக வழிகாட்ட வேண்டும். அறிவு என்ற ஆயுமே பெண்களுக்கு பலம். அதைக் கொண்டு தனித்தன்மையோடு வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். வாழ்க்கையில் வெற்றி பெற படிப்பதை ஆழப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார். பெங்களூரு வளன்சபை முதன்மை கன்னியாஸ்திரி லில்லி தொக்கனத்து பேசினர்.
மதுரை உட்பட 11 மாவட்ட கல்லுாரி மாணவிகள் போட்டிகளில் பங்கேற்றனர். மதுரை லேடி டோக் முதலிடம், திருச்சி ஹோலி கிராஸ் 2ம் இடம் வென்றன. பேராசிரியைகள் சகாய மேரி சோபியா, ஹெலன், பொன்னி, ரூபி லீலா ஏற்பாடு செய்தனர். மாணவ பேரவை இணைச் செயலாளர் கேத்தரின் நிவேதா தொகுத்து வழங்கினார். செயலாளர் தர்ஷினி நன்றி கூறினார்.