/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மீனாட்சி அம்மன் கோயில்ஆடி உற்ஸவம் கொடியேற்றம்
/
மீனாட்சி அம்மன் கோயில்ஆடி உற்ஸவம் கொடியேற்றம்
UPDATED : ஜூலை 27, 2025 08:37 AM
ADDED : ஜூலை 27, 2025 04:13 AM

கோயில் ஆடி உற்ஸவம் கொடியேற்றம்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, காலை 10:35 - 10:59 மணிக்குள்.
ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்குச் சித்தரை வீதி, மதுரை, மாலை 4:30 மணி.
உழவாரப்பணி: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஏற்பாடு: ஹிந்து ஆலயப் பாதுகாப்பு இயக்கம், காலை 9:30 மணி.
ஆடிப்பூர முப்பெரும் விழா: ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோயில், கான்பாளையம் குறுக்குத் தெரு, மதுரை, அம்மனுக்கு ஏகதின லட்சார்ச்சனை, காலை 8:00 மணி, பக்தி இன்னிசை, இரவு 7:00 மணி.
ஞாயிறு ஆராதனை: கிறிஸ்துவின் சபை, விசுவாசபுரி, மதுரை, காலை 10:00 மணி.
பக்தி சொற்பொழிவு கர்மாவின் ரகசியங்கள்: நிகழ்த்துபவர் - பிரேமகுமாரி, மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
ராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்: நிகழ்த்துபவர் - சுவாமி குணார்னவானந்தர், ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, மாலை 5:45 மணி.
லலிதா சஹஸ்ரநாம பாராயணம், விளக்கவுரை: நிகழ்த்துபவர் - சுவாமினி ப்ரசிதானந்த சரஸ்வதி, சுவாமி தத்வானந்தா ஆசிரமம், தபால்தந்தி நகர், மதுரை, காலை 7:00 மணி, பகவான் ரமணரின் சத்தர்ஸனம், காலை 9:15 மணி, தாயுமானவர் சுவாமி பாடல்கள்: நிகழ்த்துபவர் - சுவாமி சமானந்தர், இரவு 7:00 மணி.
நாம சங்கீர்த்தனம், சத்குரு ஞானானந்த பஜன் மண்டலி, 23. டி. சுப்பிரமணிய பிள்ளை தெரு, எஸ்.எஸ்.காலனி, மதுரை. மாலை 4:00 மணி.
பொது மீனாம்பாள்புரம் அடையாளமாக திகழும் ஆலமரத்திற்கு 106வது பிறந்தநாள் விழா: ஆலமரத் திடல், மீனாம்பாள்புரம், செல்லுார் - குலமங்கலம் மெயின் ரோடு, மதுரை, தலைமை: நிறுவனர் அபுபக்கர், சிறப்பு விருந்தினர்கள்: மதுரை காமராஜ் பல்கலை பேராசிரியர் நாகரத்தினம், கவுன்சிலர் முரளி கணேஷ், ஏற்பாடு: நீர்நிலைகள் பாதுகாப்பு இயக்கம், மதியம் 3:00 மணி.
'திருக்குறள் கூறியது கூறல் - தொகைச் சூத்திரங்கள்' நுால் வெளியீட்டு விழா: மணிமொழியனார் அரங்கம், நியூ காலேஜ் ஹவுஸ், மதுரை, தலைமை: பேரவைத் தலைவர் கருப்பையா, சிறப்பு விருந்தினர்: பேராசிரியர் ராமச்சந்திரன், ஏற்பாடு: உலகத் திருக்குறள் பேரவை, மாலை 5:30 மணி.
பொதுத் தேர்வில் முதல் 3 இடங்கள் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா: சேவாலயம் மாணவர் விடுதி, குமாரசாமி ராஜா தெரு, ஷெனாய் நகர், மதுரை, தலைமை: விடுதிச் செயலாளர் சீனிவாசன், சிறப்பு விருந்தினர்கள்: துணை கலெக்டர் ராமகிருஷ்ணன், இளைஞர் நீதிக்குழும உறுப்பினர் பாண்டியராஜா, காலை 11:00 மணி.
மாணவர்களுக்கு பரிசளிப்பு, முன்னாள் நிர்வாகிகளை கவுரவித்தல், ஐ.டி.விங் துவக்கம் - முப்பெரும் விழா: யாதவர் பண்பாட்டுக் கழக திருமண மண்டபம், சர்வேயர் காலனி, மதுரை, தலைமை: தலைவர் கண்ணன், சிறப்பு விருந்தினர்: டாக்டர் முத்துலட்சுமி, காலை 10:30 மணி.
சிந்தனைக் கவியரங்கம்: மணியம்மை மழலையர் பள்ளி, வடக்குமாசி வீதி, தலைமை: பேராசிரியர் சக்திவேல், முன்னிலை: புரட்சிக் கவிஞர் மன்றத் தலைவர் வரதராஜன், ஏற்பாடு: மாமதுரைக் கவிஞர் பேரவை, காலை 10:00 மணி.
குழந்தைகளின் தனித்துவ திறன்களை அடையாளம் காணுவது எப்படி - கருத்தரங்கு: கலைஞர் நுாற்றாண்டு நுாலகம், மதுரை, சிறப்புரை: சங்கீதா, ஹுஸ்னாரா பானு, காலை 11:00 மணி.
ஜீவாநகர் நாடார் உறவின்முறை சங்கம் ஆண்டுவிழா: புலிபாண்டியன் தெரு, ஜெய்ஹிந்த்புரம், மதுரை, தலைமை: பொதுச் செயலாளர் கணேசன், காலை 11:00 மணி.
இசைக் கருவிகளின் இலவச பயிற்சி வகுப்பு: நாமத்வார் பிராத்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, ஹார்மோனியம், மதியம் 12:00 முதல் 1:00 மணி வரை, மிருதங்கம், மதியம் 2:00 முதல் 3:00 மணி வரை.
கண்காட்சி மடீட்சியா சார்பில் 'இன்ட் எக்ஸ்போ' தொழில் கண்காட்சி: ஐடா ஸ்கட்டர், ரிங் ரோடு, மதுரை, காலை 10:30 முதல் இரவு 7:30 மணி வரை.
ஹஸ்தகலா - கைவினைப் பொருட்கள், ஜூவல்லரி கண்காட்சி: ஜே.சி., ரெசிடன்சி, சின்ன சொக்கிகுளம், மதுரை, காலை 11:00 முதல் இரவு 9:00 மணி வரை.
பேஷன் அண்ட் லைப் ஸ்டைல் - ஆடவர், மகளிர், குழந்தைகளுக்கான பிரபல நிறுவனங்களின் ஆடைகள், காலணிகள், வீட்டு அலங்கார பொருட்களின் கண்காட்சி, தள்ளுபடி விற்பனை: ராஜா முத்தையா மன்றம், மதுரை, காலை 10:00 முதல் இரவு 10:00 மணி வரை.
பிரீமியம் பிராண்டுகளின் ஆடவர், மகளிர், குழந்தைகளுக்கான ஆடைகள், காலணிகள் தள்ளுபடி விலையில் விற்பனை: ஓட்டல் கோர்ட்யார்டு மேரியட், அழகர்கோவில் ரோடு, மதுரை, காலை 10:00 முதல் இரவு 10:00 மணி வரை.