/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
குமரி மாவட்ட மக்கள் பொதுக்குழு கூட்டம்
/
குமரி மாவட்ட மக்கள் பொதுக்குழு கூட்டம்
ADDED : மார் 24, 2025 05:20 AM

மதுரை: மதுரையில் மதுரைவாழ் குமரி மாவட்ட மக்கள் நலப்பேரவை சார்பில் பொதுக்குழு கூட்டம் தலைவர் முத்தம்பெருமாள் தலைமையில் நடந்தது.செயற்குழு உறுப்பினர் சோமநாதன் வரவேற்றார்.
பொதுச்செயலாளர் சந்திரசேகரன் பேசியதாவது:
தினமலர் நாளிதழின் இணை நிர்வாக ஆசிரியர் டாக்டர் ஆர்.லட்சுமிபதிக்கு மத்திய அரசு சார்பில் இந்தாண்டு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கடுமையான உழைப்பாளி, தைரியசாலி. பல்வேறு அரசியல் விஷயங்களை துணிந்து எழுதியதால் பலரது எதிர்ப்புகளை சம்பாதித்தார். எனினும் தன் பணியை திறம்பட செய்தார். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என யாராக இருந்தாலும் நேர்பட எழுதுவதை விடவில்லை.
டில்லி பி.டி.ஐ., செய்தி நிறுவனத்தின் சேர்மனாக 2 முறை பதவி வகித்தவர். பார்லிமெண்ட் கூட்டம் எப்போது நடந்தாலும் அதில் பங்கேற்று உரைகளை கேட்டு விடுவார். மதுரைக் கல்லுாரி செயலாளராக இருந்தவர். பின் ஆர்.எல்., கல்விக் குழுமம், கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் சி.பி.எஸ்.இ., பள்ளி உள்ளிட்ட பல நிறுவனங்களை துவக்கி தொடர்ந்து நடத்தி வருகிறார். எவ்வித சூழலிலும் நேர்வழியை பின்பற்றுவதால் தான் இன்றளவும் யாரும் கேள்வி கேட்க முடியாத இடத்தில் இருக்கிறார். அவருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது நம் அமைப்பிற்கும், மாவட்டத்திற்கும் பெருமை, என்றார்.
நகரில் மாநகராட்சியினர் தரமான ரோடு அமைக்க வேண்டும், நடைபாதைகளில் உள்ள துரித உணவகங்களை அகற்ற வேண்டும், தெருநாய்கள், ரோட்டில் திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த வேண்டும், பாதாள சாக்கடை பணிகளை துரிதப்படுத்தி கழிவுநீர் தேங்காத வண்ணம் சுகாதாரம் காக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
துணைப் பொதுச் செயலாளர் கண்ணன், ஓய்வு பெற்ற தொழிலாளர் துணை கமிஷனர் லிங்கம், ஓய்வு பெற்ற கோவை வேளாண் பல்கலை பதிவாளர் ஆனந்தகுமார் வர்த்தக நுணுக்கங்கள் குறித்து விவரித்தனர். அமைப்பாளர் மகாராஜன் நன்றி கூறினார். செயலாளர்கள் ஜெயந்தி, சஜீவ் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். துணைப் பொதுச் செயலாளர் ஜான் ஸ்டீபன்,பொருளாளர் செல்வன் உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.