/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
குமரி - ஹவுரா ரயில் 15 மணி நேரம் தாமதம்
/
குமரி - ஹவுரா ரயில் 15 மணி நேரம் தாமதம்
ADDED : செப் 28, 2025 04:00 AM
மதுரை: கன்னியாகுமரியில் இருந்து நேற்று அதிகாலை 5:50 மணிக்கு மேற்கு வங்க மாநிலம் ஹவுரா புறப்பட வேண்டிய வாராந்திர ரயில், 15 மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.
சனிக்கிழமைதோறும் அதிகாலை 5:50 மணிக்கு குமரியில் இருந்து புறப்படும் ரயில் (12666), திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், சென்னை எழும்பூர் வழியாக திங்கள் அதிகாலை 12:05 மணிக்கு ஹவுரா செல்கிறது. இந்த ரயிலுக்கான பெட்டிகள், மும்பை - நாகர்கோவில் - மும்பை ரயில்களுக்கும் பயன்படுத்தப்படுகின்றன.
இந்நிலையில் செப். 24ல் இரவு 8:35 மணிக்கு மும்பை சி.எஸ்.எம்.டி.,யில் இருந்து புறப்பட வேண்டிய ரயில் (16339), மழை வெள்ளம் காரணமாக மறுநாள் மாலை 6:21 மணிக்கு தாமதமாக புறப்பட்டது.
இதனால் 24மணி நேரம் தாமதமாக நேற்று (செப். 27) காலை 10:00மணிக்கு நாகர்கோவில் வந்தது.இந்த இணைப்பு ரயில் தாமதம் காரணமாக,நேற்று அதிகாலை புறப்பட வேண்டிய ஹவுரா ரயில், 15 மணி நேரம் தாமதமாக இரவு 9:00 மணிக்கு புறப்பட்டுச் சென்றது.
மதுரை கோட்டத்திற்குட்பட்ட கூடல்நகர் - சோழவந்தான் இடையே பகலில் தண்டவாள பராமரிப்பு பணி நடப்பதால் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக மாற்றுப் பாதையில் ஹவுரா ரயில் செல்லும் என முன் அறிவிக்கப்பட்ட நிலையில், தாமதம் காரணமாக நேற்றிரவு மதுரை வழியாக வழக்கமான பாதையில் சென்றது.