
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலமேடு: வலையபட்டியில் யாதவர் உறவின்முறைக்கு பாத்தியமான உச்சிமாகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. பிப்.5ல் முதல்கால யாக பூஜைகள் கணபதி ஹோமத்துடன் துவங்கின. நேற்று காலை 2ம் கால யாக பூஜையை தொடர்ந்து கடம் புறப்பாடானது.
சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது. அம்மன், பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை உறவின்முறை நிர்வாகிகள், கிராம மக்கள் செய்திருந்தனர்.

