தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ நிலஅளவையர் ஆர்ப்பாட்டம்

நிலஅளவையர் ஆர்ப்பாட்டம்

நிலஅளவையர் ஆர்ப்பாட்டம்


ADDED : செப் 28, 2026 07:13 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 28, 2026 07:13 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு நிலஅளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

களப்பணியில் ஈடுபடும் நிலஅளவை அலுவலர்களுக்கு நிரந்தர பணிபாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். நிலஅளவையர் மீது தாக்குதல் நடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறப்பு பணிப்பாதுகாப்பு சட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராஜ்குமார் தலைமை வகித்தார். இணைச் செயலாளர் கீதா வரவேற்றார். செயலாளர் ரகுபதி, பொருளாளர் விக்னேஷ், வருவாய்த்துறை அலுவலர் சங்க நிர்வாகி அசோக்குமார், பொருளாளர் ராம்குமார், கிராமநிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்க நிர்வாகி சுரேஷ், கிராம நிர்வாக அலுவலர்சங்க ராஜாமணி, சாலைப் பணியாளர் சங்க நிர்வாகி தமிழ், அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் நீதிராஜா உட்பட பலர் பேசினர். நிலஅளவையர் சங்க மாவட்ட துணைத் தலைவர் ஹிருதாபிரபு நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us