ADDED : பிப் 17, 2025 05:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரையில் புரட்சிப் பாவலர் மன்றம் சார்பில் பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் நுால் தொகுப்புகள் அறிமுக விழா மன்றத் தலைவர் வரதராஜன் தலைமையில் நடந்தது. உலகத் திருக்குறள் பேரவை செயலாளர் அஷோக் ராஜூ வரவேற்றார். தொகுப்பாசிரியர் பொழிலன் விவரித்தார்.
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் பெருஞ்சித்திரனாரின் 16 நுால்கள் அடங்கிய தொகுப்பை கல்வியாளர்கள், தமிழ் மொழி பற்றாளர்கள் 50 பேருக்கு வழங்கினார். செந்தமிழ்க் கல்லுாரி பேராசிரியர் அதிவீரபாண்டியன் நன்றி கூறினார். திருவள்ளுவர் கழகம் பொருளாளர் சந்தானம், 4ம் தமிழ்ச்சங்க செயலாளர் மாரியப்பமுரளி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

