/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தலைமையாசிரியர்களுக்கு 'தலைமைத்துவ விருது'
/
தலைமையாசிரியர்களுக்கு 'தலைமைத்துவ விருது'
ADDED : ஜூலை 05, 2025 12:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை; மதுரையில் 3 அரசு பள்ளி தலைமையாசிரியர்கள் 'அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது'க்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
நிர்வாக திறமை, பள்ளி வளர்ச்சி, மாணவர்கள் மேம்பாடு ஆகிய செயல்பாடுகள் அடிப்படையில் மாநில அளவில், 2023---2024 ம் ஆண்டிற்கான 100 பேர் இவ்விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மதுரையில் தென்கரை முத்துப்பிள்ளை (வேடர்புளியங்குளம் அரசு உயர்நிலை பள்ளி), செல்வக்குமரேசன் (வீரபாண்டி ஊராட்சி தொடக்க பள்ளி), சசித்ரா (ஒத்தக்கடை அரசு மேல்நிலைப் பள்ளி) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கல்வித்துறை சார்பில் நாளை (ஜூலை 6) திருச்சியில் நடக்கும் விழாவில் இவ்விருது வழங்கப்படுகிறது.