/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வினாத்தாளில் கொஞ்சம் வினாக்களை காணோம்: மதுரையில் மாணவர்களை குழப்பிய அரையாண்டு தேர்வு
/
வினாத்தாளில் கொஞ்சம் வினாக்களை காணோம்: மதுரையில் மாணவர்களை குழப்பிய அரையாண்டு தேர்வு
வினாத்தாளில் கொஞ்சம் வினாக்களை காணோம்: மதுரையில் மாணவர்களை குழப்பிய அரையாண்டு தேர்வு
வினாத்தாளில் கொஞ்சம் வினாக்களை காணோம்: மதுரையில் மாணவர்களை குழப்பிய அரையாண்டு தேர்வு
UPDATED : டிச 21, 2024 08:11 AM
ADDED : டிச 21, 2024 04:53 AM

மதுரை : மதுரையில் அரையாண்டு தேர்வு ஒன்பதாம் வகுப்பு அறிவியல் வினாத்தாளில் 14 மதிப்பெண்களுக்கான வினாக்கள் இல்லாததால் மாணவர்கள், ஆசிரியர்கள் குழப்பமடைந்தனர்.
மதுரைக்கு மாவட்ட அளவில் இந்த வினாத்தாள் தயாரிக்கப்பட்டது. நேற்று நடந்த அறிவியல் தேர்வில் மொத்தம் 75 மதிப்பெண்களுக்கு வினாக்கள் கேட்க வேண்டும். ஆனால் 61 மதிப்பெண்ணிற்கு வினாக்கள் இடம் பெற்றன. 7 மதிப்பெண் நெடுவினா பகுதியில், மூன்று வினாக்களுக்கான மதிப்பெண் குறிப்பிடப்பட்டும் ஒரு வினா மட்டும் இடம் பெற்றிருந்தது. வினா எண்: 34, 35 ஆகிய (14 மதிப்பெண்கள்) இரண்டு வினாக்கள் இடம் பெறவில்லை. இதனால் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு குழப்பம் ஏற்பட்டது.
சி.இ.ஓ., ரேணுகா கூறுகையில், ஆங்கில மீடிய வினாத்தாளில் வினாக்கள் சரியாக இடம் பெற்றுள்ளன. ஆனால் தமிழ் வினாத்தாளில் 2 வினாக்கள் விடுபட்டிருந்தது தெரிந்தது. இதுகுறித்து அனைத்து பள்ளிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட 2 வினாக்களை எழுத மாணவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுவிட்டது என்றார்.
பேப்பரை மிச்சப்படுத்தும் நடவடிக்கையா
ஆசிரியர்கள் கூறியதாவது: தேர்வு கட்டணமாக 6 -8 வகுப்புக்கு ரூ.60, 9 - 10க்கு ரூ.80, பிளஸ் 1, பிளஸ் 2விற்கு ரூ.100 என ரூ.1 கோடிக்கு மேல் வசூலிக்கப்பட்டுள்ளது. ஆனால் வினாத்தாளின் பக்கம் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் சிறிய 'சைஸ்' எழுத்திலும் நெருக்கமாகவும் வினாக்கள் அச்சடிக்கப்பட்டன. சம்பந்தப்பட்ட நெடுவினா பகுதி, வினாத்தாளின் இரண்டாம் பக்கத்தில், கடைசியாக இடம் பெற்றிருந்தது.
விடுபட்டிருந்த 34, 35 வினாக்கள் வினாத்தாளில் இடம் பெற வேண்டும் என்றால் கூடுதலாக ஒரு பக்கம் இணைத்திருக்க வேண்டும். அதனால் வினாத்தாள் செலவு அதிகரித்திருக்கும். இதை தவிர்க்கும் நோக்கத்தில் இரண்டு வினாக்கள் விடுபடச்செய்யப்பட்டதா. இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றனர்.

