ADDED : ஆக 11, 2025 04:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான்: சோழவந்தான் இதய ஆண்டவர் கோயில் ஆண்டு விழா நடந்தது.
இக்கோயிலில் ஆக., 7ல் கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. ஆக. 8ல் நற்கருணை உலா, நேற்று முன்தினம் (ஆக. 9) தேர் பவனி நடந்தது. இதய ஆண்டவர் சிறிய தேரில் சர்ச்சில் இருந்து புறப்பட்டு 4 வீதிகளில் பவனி வந்தார். நேற்று (ஆக., 10) கொடி இறக்கத்துடன் விழா நிறைவடைந்தது.
சமயநல்லுார் பாதிரியார்கள் மார்டின் ஜோசப், பால் இக்னேஷியஸ் முன்னிலை வகித்தனர். தலைவர் அந்தோணி முத்து, துணைத் தலைவர் ஜெயசீலி, செயலாளர் சகாயராஜா, பொருளாளர் ஜான் கென்னடி ஏற்பாடுகளை செய்தனர். புனித அன்னாள் சகோதரிகள், ஆர். சி சமுதாய நலக்குழுவினர், பொதுமக்கள் பங்கேற்றனர்.