/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தாழ்வாக மின் கம்பிகள் : அச்சத்தில் மக்கள்
/
தாழ்வாக மின் கம்பிகள் : அச்சத்தில் மக்கள்
ADDED : ஜூன் 12, 2025 02:18 AM

சோழவந்தான்: சோழவந்தான் அரசு மருத்துவமனை அருகே உயர் மின்னழுத்த கம்பிகள் தாழ்வாக ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
ராமச்சந்திரன்: மருத்துவமனை வாசலிலேயே உயர் மின்னழுத்த கம்பிகள் அதிக அளவில் சிக்கலாகவும், மிகத் தாழ்வாகவும் செல்கின்றன. அனைத்து பஸ்களும் இவ்வழியே பஸ் ஸ்டாண்டிற்கு செல்லும். மேலும் விவசாய பயன்பாட்டிற்கு செல்லும் வாகனங்கள், மட்டை ஏற்றிச் செல்லும் லாரிகள் உயரமாக இருப்பதால் கம்பிகளில் உரச வாய்ப்புகள் அதிகம். பலமுறை கோரிக்கை விடுத்தும் பலனில்லை. உயிரிழப்பு ஏற்படுவதற்கு முன் அதிகாரிகள் சரி செய்ய வேண்டும் என்றார். மின்வாரியம் தரப்பில் கேட்டபோது, ''ஜெனகை மாரியம்மன் கோயில் திருவிழா முடிந்தவுடன் சரி செய்யப்படும்'' என்றனர்.