sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

திகில் படத்தில் நடிக்க வேண்டும் 'மதராஸி' அக் ஷய் கிருஷ்ணா ஆசை

/

திகில் படத்தில் நடிக்க வேண்டும் 'மதராஸி' அக் ஷய் கிருஷ்ணா ஆசை

திகில் படத்தில் நடிக்க வேண்டும் 'மதராஸி' அக் ஷய் கிருஷ்ணா ஆசை

திகில் படத்தில் நடிக்க வேண்டும் 'மதராஸி' அக் ஷய் கிருஷ்ணா ஆசை


ADDED : செப் 28, 2025 03:56 AM

Google News

ADDED : செப் 28, 2025 03:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

த மிழ் சினிமாவில் தற்போது குழந்தை நட்சத்திரங்கள், சிறு கதாபாத்திரத்தில் வந்தாலும், பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் வெளியான 'மதராஸி' படத்தில் நடித்த அக் ஷய் கிருஷ்ணா நம்பிக்கை தரும் குழந்தை நட்சத்திரமாக மாறி உள்ளார். 14 வயதாகும் இவர் மாடலிங், விளம்பரங்களிலும் வலம் வருகிறார்.

அக் ஷய் கிருஷ்ணா கூறியதாவது:

4ம் வகுப்பு படிக்கும் போது நடிக்க ஆர்வம் ஏற்பட்டது. அப்பா பாலமுரளி கிருஷ்ணன், அம்மா பாமினியிடம் தெரிவித்த போதுஎன்னை போட்டோஷூட் எடுக்க அழைத்துச் சென்றனர். மாடலிங் செய்ய விரும்பி அதற்கான வகுப்புகளில் பங்கேற்ற போது, நடிப்புக்கான நுணுக்கங்களை பயிற்றுவித்தனர். மாடலிங் ஆர்வம் குறைந்து நடிப்பை நன்றாக கற்றுக் கொண்டேன். என் முதல் படம் நடிகர் சிவகார்த்திகேயனின் 'டான்' திரைப்படம். அவரது சிறு வயது கதாபாத்திரத்தில் நடித்தேன்.

முதல் ஆடிஷனில் 2 பக்க தமிழ் வசனங்கள் கொடுத்தனர். முயற்சித்து பார்க்க ஆசைப்பட்டேன். 10 நிமிடத்தில் மனப்பாடம் செய்து நடித்து காட்டினேன். வாய்ப்பு கிடைத்தது. அடுத்த படம் இயக்குனர் ஹரியின் யானை. அடுத்து நடித்த சிங்கப்பூர் சலுான் திரைப்படம் மூலம் தான் மக்களுக்கு தெரிந்தேன். ஆர்.ஜே.பாலாஜி கதாபாத்திரத்திற்கு நடிக்க வேண்டியிருந்தது. உயரம் காரணமாக வாய்ப்பு தவறி, கிஷன் தாஸ்சின் சிறு வயது கதாபாத்திரத்தில் நடித்தேன்.

பரம்பொருள் படத்தில் அமிதாஷ்சின் சிறு வயது கதாபாத்தித்தில் நடித்தேன். இப்போது மதராஸி. இது எனக்கு திருப்புமுனை ஏற்படுத்திய படம் என்பேன். மதராஸி திரைப்படத்தில் வரும் நேரம் குறைவாக இருந்தாலும், நடிப்பு நன்றாக இருக்கிறது என பலர் பாராட்டினர். இந்த கதாபாத்திரம் நிறைய குழந்தை நட்சத்திரங்களால் நடிக்க முடியாது. இதை உட்கிரகித்து நடித்ததாக படக்குழுவினர் பாராட்டினர். இயக்குனர் முருகதாஸ் எவ்வளவு பெரிய அனுபவம் கொண்டவர் என எனக்கு தெரியும். இந்த படம் ஹிட் ஆனதால் பலரது பாராட்டை பெற்றேன்.

அடுத்ததாக நலன்குமரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் 'வா வாத்தியார்' படத்தில் நடித்துள்ளேன். டிசம்பரில் வெளியாகிறது.விஜய், சிவகார்த்திகேயனிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன். இவர்கள் என் இன்ஸ்பிரேஷன்.

வெளியூரில் வேலை பார்க்கும் அப்பா வாரம் ஒரு முறை வீட்டுக்கு வருவார். சனி, ஞாயிறு நான் அம்மாவுடன் ஷூட்டுக்கு போய்விடுவேன். அப்போது அப்பாவே சமைத்து வீட்டை பார்த்துக் கொள்வார். நண்பர்கள் எனக்கு மிஸ் ஆன பாடங்களை எளிதில் எடுத்துக் கூறுவர். பள்ளியும் பெரிய ஆதரவு தளமாக உள்ளது.

எனது கனவு விஜய் உடன் நடிக்க வேண்டும் என்பது தான். கடைசி படம் ஜனநாயகன் என்பது கஷ்டமாக உள்ளது. 7 ஆண்டுகளாக நடனம் கற்றுக் கொள்கிறேன். அவரது ஸ்டைலில் நடனமாட முயற்சி செய்கிறேன்.

நடிப்பில் எனக்கு காமெடி 'ஜானர்' நன்றாக வரும். அடுத்தடுத்து 'கவுன்டர்' கொடுப்பேன். சிங்கப்பூர் சலுானில் காமெடி ரோல் தான். திகில் திரைப்படங்களும் நடிக்க ஆசை என்றார்.






      Dinamalar
      Follow us