மிஷ்கின், கீர்த்தி சுரேஷ் இணையும் புதிய படம்
நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு பிறகு, பெண் முதன்மை கதாபாத்திரம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். இந்த வரிசையில் அடுத்து அறிமுக இயக்குனர் பிரவீன் எஸ் விஜய் இயக்கத்தில் மிஷ்கின் உடன் இணைந்து புதிய படத்தில் நடிக்கவுள்ளார். கோர்ட் ரூம் டிராமா வகையில் உருவாகும் இப்படம் பூஜையுடன் துவங்கியுள்ளது. சாம்.சி.எஸ் இசையமைக்கிறார்.
--------------நிவின்பாலி படங்களை பாராட்டிய பவன் கல்யாண்
தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் சமீபத்தில் பிறந்தநாள் கொண்டாடினார். அவருக்கு திரையுலகினர் பலரும் வாழ்த்து கூறினர். அவர்களுக்கு தனித்தனியாக நன்றி தெரிவித்த பவன் கல்யாண், மலையாள நடிகர் நிவின்பாலியின் வாழ்த்துக்கு நன்றி கூறிவிட்டு, ''எப்போதுமே நீங்கள் நடிக்கும் கதாபாத்திரங்களுக்கு ஆழமாக உயிர் கொடுப்பதை நான் பாராட்டுகிறேன். குறிப்பாக 'ஓம் சாந்தி ஒசானா, பிரேமம்' ஆகிய படங்கள்'' என்று கூறியுள்ளார்.
நடிகராகும் வெண்ணிற ஆடை மூர்த்தி பேரன்
தமிழில் சீனியர் நடிகரான 'வெண்ணிற ஆடை' மூர்த்தி, கடந்த சில ஆண்டுகளாக சினிமாவில் நடிக்கவில்லை. இவரது ஒரே மகன் அமெரிக்காவில் உயர் பதவியில் இருக்கிறார். அவரது மகனும், மூர்த்தியின் பேரனுமான மனஸ் மானு, தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாக உள்ளார். இயக்குனர் உள்ளிட்ட விபரங்கள் விரைவில் வெளியாகிறது.--------------
வசனமே இல்லாமல் வெளியாகும் 'உப் யே சியாபா'
ஜி. அசோக் இயக்கத்தில் நடிகர்கள் சோஹம் ஷா, நுஷ்ரத் பருச்சா, நோரா பதேஹி, ஓம்கார் கபூர் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் 'உப் யே சியாபா'. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இன்று ரிலீசாகும் இப்படத்தில் எந்தவொரு வசனமும் இல்லையாம். படம் பற்றி ரஹ்மான் கூறுகையில், ''இசையே இப்படக் கதையின் ஒரு பகுதி. புதிய பாணிகளை பரிசோதிப்பதை ரசித்தேன். நகைச்சுவை, திரில்லர் வகை படமான இது கூடுதல் சவாலாக இருந்தது'' என்றார்.------