sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மதுரை- சினிமா-

/

மதுரை- சினிமா-

மதுரை- சினிமா-

மதுரை- சினிமா-


ADDED : ஆக 28, 2025 11:30 PM

Google News

ADDED : ஆக 28, 2025 11:30 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஷாலினி பிறந்தநாளில் 'அமர்க்களம்' ரீ ரிலீஸ்

சரண் இயக்கத்தில் அஜித், ஷாலினி நடிப்பில் 1999ல் வெளியாகி, வரவேற்பை பெற்ற படம் 'அமர்க்களம்'. இதில் தான் அஜித், ஷாலினி இடையே காதல் மலர்ந்து, திருமணமும் செய்தார்கள். இந்தப்படம் 25 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில் நவ., 20ல் ஷாலினியின் பிறந்தநாளில் ரீ-ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

சமீபத்தில் விஜயகாந்தின் 'கேப்டன் பிரபாகரன்' படத்தை ரீ-ரிலீஸ் செய்த கார்த்திக் வெங்கடேசன் அடுத்து இந்தபடத்தை வெளியிட போவதாக தெரிவித்தார்.

சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் 'கார்மேனி செல்வம்'

இயக்குனர்கள் சமுத்திரக்கனி, கவுதம் மேனன் இருவருமே தற்போது நடிகர்களாக பிஸியாக நடித்து வருகின்றனர். இவர்கள் இணைந்து 'கார்மேனி செல்வம்' என்கிற புதிய படத்தில் நடித்துள்ளனர். பயணம் தொடர்பான கதையாக உருவாகி உள்ள இதை ராம் சக்ரீ என்பவர் இயக்குகிறார். படப்பிடிப்பு நடந்து வருகிறது. வரும் தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

'திரெளபதி 2'வில் சரித்திர கதை

திரெளபதி படத்திற்கு பின் இயக்குனர் மோகன்ஜி, நடிகர் ரிச்சர்ட் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படம் திரெளபதி 2. ''தென்னகத்தை ஆண்ட ஹொய்சாள பேரரசன், மூன்றாம் வீர வல்லாளர் மற்றும் சேந்தமங்கலத்தை ஆண்ட காடவராயர்களின் வீரம், தியாகம், ஆகியவற்றுடன் வலி நிறைந்த ரத்த சரித்திரம் இது'' என குறிப்பிட்டுள்ளார் மோகன்ஜி.

விஜய் மில்டனின் 'காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ்'

ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான விஜய் மில்டன் தற்போது ஒரு படத்தை தயாரித்து, இயக்குகிறார். இதில் தெலுங்கு நடிகர் ராஜ் தருண் தமிழில் அறிமுகமாக முக்கிய வேடங்களில் பரத், ஆரி, சுனில், அம்மு அபிராமி, பாடகர் பால் டப்பா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் என பெயரிட்டு முன்னோட்ட வீடியோவையும் வெளியிட்டுள்ளனர். விஜய் மில்டனின் கோலி சோடா படங்களின் தொடர்ச்சியாக இது உருவாகிறது.

தீபாவளி போட்டியில் டீசல்

வரும் தீபாவளிக்கு துருவ் நடித்த 'பைசன்', பிரதீப் ரங்கநாதனின் 'டியூட், எல்.ஐ.கே' ஆகிய படங்கள் ரிலீஸாகின்றன. இவற்றுடன் ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி நடித்துள்ள 'டீசல்' படமும் தீபாவளியை முன்னிட்டு அக்., 17ல் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. சண்முகம் முத்துசாமி இயக்கி உள்ளார். இதில் ஆக் ஷன் ஹீரோவாக களமிறங்கி உள்ளார் ஹரிஷ்.






      Dinamalar
      Follow us