/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அதிகாரிகளின் விரோத போக்கு சமரசமின்றி போராடுவோம் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் எச்சரிக்கை
/
அதிகாரிகளின் விரோத போக்கு சமரசமின்றி போராடுவோம் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் எச்சரிக்கை
அதிகாரிகளின் விரோத போக்கு சமரசமின்றி போராடுவோம் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் எச்சரிக்கை
அதிகாரிகளின் விரோத போக்கு சமரசமின்றி போராடுவோம் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் எச்சரிக்கை
ADDED : ஆக 28, 2025 11:29 PM
மதுரை: 'அதிகாரிகளின் ஊழியர் விரோத போக்குக்கு நடவடிக்கை எடுக்காவிட்டால் சமரசமற்ற முறையில் போராடுவோம்,' என, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் எச்சரித்துள்ளது.
மதுரையில் இச்சங்க மாநில தலைவர் பாஸ்கரன், பொது செயலாளர் சீனிவாசன் கூறியதாவது: பல்வேறு துறை நிர்வாகங்களில் அதிகாரிகளின் அணுகுமுறை இதுவரை எந்த ஆட்சியிலும் இல்லாத அளவு ஆணவப்போக்கு, ஊழி யர் விரோதம், சங்க கருத்துக்களை கேட்க மறுப்பது, பழிவாங்கும் நடவடிக்கை என நடக்கிறது.
வேளாண் இயக்குனர் முருகேசனின் ஆய்வுக்கூட்ட பேச்சு இதுவரை எந்த அதிகாரியும் பேசாத வகையில் உள்ளது. 'முட்டாள் மாதிரி பேசாதீங்க, நாட்களை தின்று கொண்டு இருக்கிறீர்கள் பன்றி மாதிரி' என்றெல்லாம் இணை இயக்குனர் போன்ற அதிகாரிகளிடம் பேசுகிறார்.
இதேபோல தொழிலாளர் நலத்துறை அதிகாரி விமலநாதன், கலந்தாய்வு, பதவி உயர்வுக்காக போராடிய ஊழியர்களை அலைபேசியில் அழைத்து எச்சரித்துள்ளார். பட்டுவளர்ச்சித் துறையை மூடும் வகையில் நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளைக் கண்டித்து ஜூலையில் சேலம் இயக்குனரகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதிகாரிகள் இந்த நடவடிக்கையை ஏற்காமல், ஊழியர்களுக்கு ஊதிய பிடித்தம் செய்துள்ளனர்.
இதுபோன்ற நடவடிக்கைகள் அலுவலக நடைமுறை, அரசியல் அமைப்புச்சட்டம், தொழில் தகராறு சட்டம் எதிலும் இல்லை. இதனால் அரசு ஊழியர்களின் கருத்துகளை அரசுக்கு எவ்வாறு எடுத்துச் செல்ல முடியும்.
இவ்வாறு அதிகாரிகள் செயல்படுவதால்தான் ஆய்வுக் கூட்டங்களில் அதிகாரிகள் மயங்கி விழுவதும், தற்கொலை செய்து கொள்வதும் நடக்கிறது.
ஐந்து லட்சம் காலிப்பணியிடங்கள் இருந்தாலும் புதுப்புது அறிவிப்புகள், புதுப்புது திட்டங்களை அரசு அறிமுகப்படுத்தினாலும், அதை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
எனவே இதுபோன்ற நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அனுமதிக்காது. ஊழியர்கள் உரிமையை நசுக்கினால் சங்கம் போராட்ட களம் காணும். இதுபோன்ற அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் . அனைத்து சங்கங்களின் போராட்டக் குழுக்கூட்டத்தைக் கூட்டி அதிகாரிகளின் ஊழியர் விரோத போக்கு, அதை அனுமதிக்கும் தமிழக அரசை கண்டித்து சமரசமற்ற முறையில் நடவடிக்கை மேற்கொள்வோம் என்றனர்.