/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை கம்யூ., எம்.பி., மீது தி.மு.க., நிர்வாகிகள் அதிருப்தி உதயநிதி முன்னிலையில் குமுறல்

ADDED : பிப் 01, 2024 07:25 AM
மதுரை, : சென்னையில் நடந்த தி.மு.க., தேர்தல் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் மதுரை மார்க்சிஸ்ட் கம்யூ., எம்.பி., வெங்கடேசன் மீது நிர்வாகிகள் அதிருப்தி தெரிவித்து, தி.மு.க., போட்டியிட வேண்டும் என வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
லோக்சபா தேர்தலை சந்திப்பது குறித்து இளைஞரணி செயலாளர் உதயநிதி தலைமையில் தொகுதி வாரியாக நிர்வாகிகள் ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்தப்படுகிறது. நேற்றுமுன்தினம் மதுரை லோக்சபா தொகுதிக்கான ஒருங்கிணைப்பு கூட்டம் நடந்தது. அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, நேரு, வேலு முன்னிலை வகித்தனர்.
மதுரை அமைச்சர்கள் மூர்த்தி, தியாகராஜன், எம்.எல்.ஏ., தளபதி, மேயர் இந்திராணி பொன்வசந்த், பகுதி செயலாளர்கள் பங்கேற்றனர். இதில் பகுதி செயலாளர்கள் உள்ளிட்டோர் தற்போதைய மார்க்சிஸ்ட் கம்யூ., எம்.பி., வெங்கடேசன் மீது அதிருப்தி தெரிவித்து, மதுரையில் தி.மு.க., வேட்பாளரை களம் இறக்க வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து மதுரை தி.மு.க.,வினர் கூறியதாவது: எம்.பி., வெங்கடேசனின் ஐந்தாண்டுகாலப் பணிகள் திருப்தியளிக்கவில்லை. மாநகராட்சி துணை மேயர் பதவியும் அக்கட்சிக்கு தாரைவார்க்கப்பட்டுள்ளதால் தி.மு.க., நிர்வாகிகள் அதிருப்தியில் உள்ளனர்.
மீண்டும் வெங்கடேசன் போட்டியிட்டால் அதன் முடிவுகள் குறித்து போலீஸ் உளவுத்துறையும் கட்சி தலைமைக்கு 'ரிப்போர்ட்' அனுப்பியுள்ளது. அதே கருத்தை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். தி.மு.க., போட்டியிட வேண்டும் என நிர்வாகிகள் கூறிய கருத்தை உதயநிதி கவனமாக கேட்டு குறிப்பு எடுத்துக்கொண்டார் என்றனர்.