/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை மாநகராட்சி முறைகேடு வழக்கு: ஒருவருக்கு ஜாமின் * ஒருவருக்கு ஜாமின்

ADDED : பிப் 08, 2026 06:31 AM
மதுரை: மதுரை மாநகராட்சி முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள தற் காலிக ஊழியருக்கு ஜாமின் வழங்கி உயர்நீதி மன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
மாநகராட்சியில் சொத்து வரியை குறைத்து, முறைகேடு செய்ததாக மாநகராட்சி கமிஷனர் அளித்த புகாரின் பேரில், மத்திய குற்றப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
2022 ஏப். 1 முதல் 2024 ஜூலை 31 வரை நடந்த முறைகேட்டில் மாநகராட்சிக்கு ரூ.1.50 கோடி வரை இழப்பு ஏற்பட்டது.
இவ்வழக்கில் கைதாகி சிறையில் உள்ள தற் காலிக ஊழியர் பழனிக் குமார், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்தார். நீதிபதி எஸ்.ஸ்ரீமதி விசாரித்தார்.
அரசு தரப்பில் ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இவ் வழக்கில் தொடர்புடைய மற்றொரு நபர் ஜாமினில் விடுவிக்கப்பட்டிருப்பதை யும், மனுதாரர் சிறையில் இருந்த காலத்தையும் கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமின் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.