sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

குற்றச்சாட்டுடன் ஓய்வு பெற அனுமதி : சிறப்பு கமிஷனரின் உத்தரவு ரத்து

/

குற்றச்சாட்டுடன் ஓய்வு பெற அனுமதி : சிறப்பு கமிஷனரின் உத்தரவு ரத்து

குற்றச்சாட்டுடன் ஓய்வு பெற அனுமதி : சிறப்பு கமிஷனரின் உத்தரவு ரத்து

குற்றச்சாட்டுடன் ஓய்வு பெற அனுமதி : சிறப்பு கமிஷனரின் உத்தரவு ரத்து


ADDED : ஜூலை 26, 2011 12:52 AM

Google News

ADDED : ஜூலை 26, 2011 12:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : ராமநாதபுரத்தை சேர்ந்த குழந்தைகள் நல திட்ட அலுவலரை, குற்றச்சாட்டுடன் ஓய்வு பெற அனுமதித்த சமூக நலத்துறை சிறப்பு கமிஷனர் பிறப்பித்த உத்தரவை, மதுரை ஐகோர்ட் கிளை ரத்து செய்தது.

அவருக்கு ஓய்வூதியம் வழங்கவும் உத்தரவிட்டது. ராமநாதபுரத்தை சேர்ந்த பெண்ணரசி தாக்கல் செய்த ரிட் மனு: குழந்தைகள் நல திட்டத்தில் பணிபுரிந்தேன். கமுதியில் திட்ட அலுவலராக பணிபுரிந்து, 2008 ஜூன் 30ல் ஓய்வு பெற அனுமதிக்கப் பட்டேன். ஓய்வு பெறும் நாளில், குற்றச்சாட்டுகளுக்கு குந்தகமின்றி ஓய்வு பெற அனுமதிக்கப்பட்டேன். இதனால், ஓய்வூதியம் உட்பட இதர பயன்கள் மூன்றாண்டுகளாக வழங்கப்படவில்லை. எனவே, குற்றச்சாட்டுகளுக்கு குந்தகமின்றி ஓய்வு பெற அனுமதித்த சமூக நலத்துறை சிறப்பு கமிஷனர் உத்தரவை ரத்து செய்ய வேண்டும், என கோரினார். மனுதாரர் சார்பில் வக்கீல் விஸ்வலிங்கம் ஆஜரானார். நீதிபதி கே.வெங்கட்ராமன், ''சிறப்பு கமிஷனர் அரசு அடிப்படை விதிகளுக்கு முரணாக குற்றச்சாட்டுகளுக்கு குந்தகமில்லா ஓய்வு பெற அனுமதித்துள்ளார். அது ரத்து செய்யப்படுகிறது. அவருக்கு ஓய்வூதியம் மற்றும் இதர பயன்களை வழங்க வேண்டும்,'' என்றார்.








      Dinamalar
      Follow us