sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 23, 2026 ,மாசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

நான்கு மாதங்களாக நெடுஞ்சாலைத்துறைக்கு தார் டிரம்கள் சப்ளை இல்லை

/

நான்கு மாதங்களாக நெடுஞ்சாலைத்துறைக்கு தார் டிரம்கள் சப்ளை இல்லை

நான்கு மாதங்களாக நெடுஞ்சாலைத்துறைக்கு தார் டிரம்கள் சப்ளை இல்லை

நான்கு மாதங்களாக நெடுஞ்சாலைத்துறைக்கு தார் டிரம்கள் சப்ளை இல்லை


ADDED : ஆக 03, 2011 12:56 AM

Google News

ADDED : ஆக 03, 2011 12:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரையில் நெடுஞ்சாலைத்துறைக்குட்பட்ட ரோடுகளை பராமரிக்க, நான்கு மாதங்களாக தார் டிரம்கள் சப்ளை செய்யவில்லை.

எல்லாமே மேலிடத்தில் கேட்க வேண்டும் என்ற உத்தரவால், ரோடுகள் படுமோசமாக மாறி விபத்தை ஏற்படுத்தி வருகின்றன. நகரில் மாநில நெடுஞ்சாலைத்துறையின்கீழ் பைபாஸ் ரோடு, காளவாசல் - அரசரடி ரோடு, திருப்பரங்குன்றம் ரோடு முக்கியமானவை. பொதுவாக, ஆண்டுதோறும் ஏப்ரலில் ரோடு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். குண்டும், குழியுமான ரோடுகளை சீரமைப்பது, ரோட்டை அகலப்படுத்துவது போன்ற பணிகள் இக்காலத்தில் மேற்கொள்ளப்படும்.



மதுரை கோட்டத்திற்கு குறைந்தது 60 தார் டிரம்கள் ( ஒரு டிரம் என்பது 156 கிலோ) ஆண்டுதோறும் மார்ச்சில் வழங்கப்படும். இந்தாண்டு தேர்தல் காரணமாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்வது தாமதம் ஆனது. ஆட்சி மாற்றத்திற்கு பின், இப்பணி மேற்கொள்ளப்படவிருந்த நிலையில், 'டெண்டரோ, பராமரிப்பு பணியோ எந்த வேலை என்றாலும் மேலிடத்தின் ஒப்புதல் பெற்றுதான் செய்ய வேண்டும்' என்று தலைமை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதனால் அதிகாரம் இருந்தும் அதிகாரிகளால் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள முடியவில்லை.



ஒருவேளை தங்களையும்மீறி பணிகளை மேற்கொண்டு 'கமிஷன்' பார்த்துவிடுவார்கள் என்றுக்கருதி, நான்கு மாதங்களாக தார் டிரம்களையும் சப்ளை செய்யவில்லை. அதிகாரிகள் பலமுறை கடிதம் எழுதியும் பலனில்லை. இதனால் குண்டும், குழியுமான ரோடுகள் மேலும் படுமோசமாகி வருகின்றன. வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன. நெரிசல் ஏற்படுகின்றன. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது : விரைவில் தார் சப்ளை செய்யப்படும் எனக்கருதுகிறோம். மதுரை கோட்டத்தில் ரோடு பராமரிப்பிற்கு மத்திய அரசு ரூ.41.50 கோடி ஒதுக்கியுள்ளது. இந்நிதியைக் கொண்டு விமான நிலையம் - மண்டேலா நகர் ரோடு, எல்லீஸ்நகர் - காளவாசல் ரோடுகளை பராமரிக்க உள்ளோம். குறிப்பாக, அரசரடி குடிநீரேற்று நிலையம் எதிரே, பைப்பிலிருந்து தண்ணீர் 'லீக்' ஆவதால் தொடர்ந்து ரோடு மோசமாகி வருகிறது. இதை தடுக்க 'பேவர் பிளாக்' கற்கள் பதிக்க உள்ளோம். தவிர, ஆஸ்டின்பட்டி ரோட்டையும் அகலப்படுத்த உள்ளோம், என்றனர்.










      Dinamalar
      Follow us