sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 27, 2026 ,மாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

குன்றத்தில் பாதி எரிந்த நிலையில் ஆண் பிணம்

/

குன்றத்தில் பாதி எரிந்த நிலையில் ஆண் பிணம்

குன்றத்தில் பாதி எரிந்த நிலையில் ஆண் பிணம்

குன்றத்தில் பாதி எரிந்த நிலையில் ஆண் பிணம்


ADDED : ஆக 15, 2011 01:47 AM

Google News

ADDED : ஆக 15, 2011 01:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் அருகே பாதி எரிந்த நிலையில் கிடந்த ஆண் பிணத்தை கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருப்பரங்குன்றம்-நிலையூர் ரோட்டில், ஓம்சக்திநகரில் முட்செடிகள் வளர்ந்த பகுதியில், முகம் கருகி, உடல் பாதி எரிந்த நிலையில் ஆண் பிணம் கிடந்தது. எஸ்.பி., ஆஸ்ரா கர்க் தலைமையில் டி.எஸ்.பி., முருகேசன், இன்ஸ்பெக்டர் குரு வெங்கட்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். பிணத்தின் கழுத்தில் இறுக்கப்பட்டிருந்த துண்டும் கருகிய நிலையில் இருந்தது. கொலையாளிகள் அவரை வேறிடத்தில் கொலை செய்து, இங்கு வந்து எரிந்தனரா?, அல்லது அப்பகுதிக்கு கடத்தி வந்து, கழுத்தை நெரித்து கொலை செய்து எரிக்கப்பட்டாரா? என போலீசார் விசாரிக்கின்றனர். கருகிய பிணத்தின் அடியில் உரப்பொடி சாக்கு விரிக்கப்பட்டிருந்ததாகவும், வேட்டி, காக்கி சட்டை அணிந்திருக்கலாம் எனவும் போலீசார் தெரிவித்தனர்.

இதுகுறித்து திருநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.










      Dinamalar
      Follow us