sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 06, 2026 ,மாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மறுவாழ்வு மைய நோயாளிகள் ஓட்டளிப்பதை எதிர்த்து மனு : கலெக்டருக்கு ஐகோர்ட் உத்தரவு

/

மறுவாழ்வு மைய நோயாளிகள் ஓட்டளிப்பதை எதிர்த்து மனு : கலெக்டருக்கு ஐகோர்ட் உத்தரவு

மறுவாழ்வு மைய நோயாளிகள் ஓட்டளிப்பதை எதிர்த்து மனு : கலெக்டருக்கு ஐகோர்ட் உத்தரவு

மறுவாழ்வு மைய நோயாளிகள் ஓட்டளிப்பதை எதிர்த்து மனு : கலெக்டருக்கு ஐகோர்ட் உத்தரவு


ADDED : அக் 09, 2011 01:37 AM

Google News

ADDED : அக் 09, 2011 01:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம் ஓய்.புதுப்பட்டி ஊராட்சி தலைவர் தேர்தலில் அரசு மறுவாழ்வு மைய நோயாளிகள் ஓட்டளிக்க தடை கோரும் மனுவை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க மாநில தேர்தல் ஆணையத்திற்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

ஓய்.புதுப்பட்டி ஊராட்சி தலைவர் வேட்பாளர் எம்.செல்வராஜ் தாக்கல் செய்த ரிட் மனு: ஊராட்சி தலைவருக்கு அக்., 17ல் நடக்கும் தேர்தலில் போட்டியிடுகிறேன். ஊரில் தொழுநோயாளிகளுக்கு மறுவாழ்வு மையத்தை அரசு நடத்துகிறது. வெளியூர் நோயாளிகள் இங்கு சிகிச்சை பெறுகின்றனர். குணமான பின், சொந்த ஊருக்கு செல்வர். அவர்கள் நிரந்தரமாக இங்கு குடியிருப்பவர்கள் இல்லை. அவர்களுக்கு இங்கு ரேஷன்கார்டு போன்ற ஆவணங்கள் இல்லை. மக்கள் பிரதிநிதித்துவம் சட்டப்பிரிவு 19ன்படி உள்ளூரில் வசிப்பவர்கள் மட்டும் ஓட்டளிக்க முடியும். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் நோயாளிகள், சிறையில் இருப்பவர்கள் ஓட்டளிக்க முடியாது என மக்கள் பிரதிநிதித்தும் சட்டம் குறிப்பிடுகிறது. மறுவாழ்வு மைய நோயாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு, வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர்.



நோயாளிகள் வேட்பாளர்களிடம் முறைகேடாக பணம் பெற்று ஓட்டை விலைக்கு விற்கின்றனர். நோயாளிகள் ஓட்டளிக்க தடை விதிக்க வேண்டும். முறையான தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும், என தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் சார்பில் வக்கீல் வி.நாகேந்திரன் ஆஜரானார்.நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், ''அக்., 17ல் தேர்தல் நடக்கவுள்ளதால், மனுதாரர் மனுவை பத்து நாட்களுக்குள் பரிசீலித்து சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என கலெக்டர், மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டார்.










      Dinamalar
      Follow us