/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை கிழக்கு அ.தி.மு.க., கோட்டை; பூத் கமிட்டி கூட்டத்தில் உறுதி
/
மதுரை கிழக்கு அ.தி.மு.க., கோட்டை; பூத் கமிட்டி கூட்டத்தில் உறுதி
மதுரை கிழக்கு அ.தி.மு.க., கோட்டை; பூத் கமிட்டி கூட்டத்தில் உறுதி
மதுரை கிழக்கு அ.தி.மு.க., கோட்டை; பூத் கமிட்டி கூட்டத்தில் உறுதி
ADDED : ஜூன் 17, 2025 01:13 AM
மதுரை : மதுரை ஒத்தக்கடையில் அ.தி.மு.க., மதுரை கிழக்கு மாவட்டம் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கூட்டம் நேற்று நடந்தது. ஒன்றியசெயலாளர் சேனாதிபதி தலைமை வகித்தார்.எம்.ஜி.ஆர்., மன்ற துணைச் செயலாளர் முத்துகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
நிர்வாகிகளுக்கு செயலாளர் ராஜன் செல்லப்பா, பொறுப்பாளர் காந்தி, தகவல் தொழில்நுட்ப செயலாளர் ராஜ்சத்யன் ஆலோசனை வழங்கினர்.ராஜன் செல்லப்பா பேசியதாவது: அ.தி.மு.க.,வை வெற்றி பாதைக்கு பழனிசாமி எடுத்து செல்கிறார். வரும் சட்டசபை தேர்தலில் பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைவது உறுதி. அவரின் நான்காண்டு ஆட்சியில் மக்கள் அனைத்து வளத்துடன் வாழ்ந்தனர். இன்றைக்கு மக்கள் மட்டுமின்றி, போலீசாரின் உயிருக்கு கூட பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகியுள்ளது.
தி.மு.க., ஆட்சியில் தொடர்ச்சியாக ஏற்படும் அவலநிலையால் 234 தொகுதிகளிலும் அ.தி.மு.க., வெற்றி பெறும். அ.தி.மு.க., கொண்டு வந்த பல திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. தி.மு.க., கூட்டணி கட்சிகளின் அதிருப்தியால், கூட்டணி பலவீனமாக உள்ளது.
கடந்த 2021 தேர்தலில் மதுரை கிழக்குமாவட்டத்தில் உள்ள மேலுார், திருப்பரங்குன்றம் தொகுதியில் வென்றோம். 2026 தேர்தலில் மதுரை கிழக்கு தொகுதி சேர்த்துமூன்று தொகுதிகளிலும் அ.தி.மு.க., வெற்றியடையும். மதுரை கிழக்கு அ.தி.மு.க., கோட்டை என்பதை வரும் தேர்தலில்நிரூபிக்க வேண்டும் என்றார்.